உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள் இடம்

காலம்

செய்தி

  • கல்வெட்டு

-

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.

விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம் விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்த றெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.

இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

தூ ண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.

1. தாரண வரு

2. ஷம் பங்கு

3.

னி மாதம் 25

4.

தேதி ஸ்ரீமந் ம