உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 185

93. திப்புவின் திவான் தீர்ப்புப் பட்டயம்*

ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட் சியகத்தில் இந்த ஓலைப்பட்டயம் உள்ளது.

கொங்கு நாட்டு விசயமங்கலப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் இடங்கை வலங்கைப் பிரிவுகளாக இயங்கி வந்துள்ளனர். செங்குந்த முதலியார், படையாட்சிக் கவுண்டர், ஆசாரிகள் ஆகிய பஞ்சகம்மாளர், நகரத்தார், பள்ளர், மாதாரிகள் ஆகியோர் இடங்கைச் சாதியாகவும், கவரைச் செட்டிகள், தேவாங்கர், சாணார் ஆகியோர் வலங்கைச் சாதியாகவும் தம்மை அழைத்துக் கொண்டனர்.

விசய மங்கலம் மாரியம்மன் திருவிழாவில் இடங்கைக்குரிய சில சிறப்புக்களை வலங்கையார் அணிந்து கொண்டனர். இடங்கையார் ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வருடம் இந்தத் தகராறு நீடித்தது. அங்கு வந்த அசரத் திப்பு சுல்தானின் அந்தியூர் திவான் கிரிமிரே சாயபு பாட்சாவிடம் முறையிட அவர் 'பூர்வம் தீர்ந்த பட்டயங்கள்' வாங்கிக் கொண்டு ஆதாரங்களுடன் அவர்களைத் திருப்பூருக்கு வரச் சொல்லுகிறார்.

திருப்பூரில் விசாரித்தபின் தவறாக வழக்குத் தொடுத்த வலங்கையார்க்கு 2400 பொன் அபராதம் விதித்து வலங்கை, இடங்கையார்க்குப் பூர்வீகம் முதல் என்னென்ன உரிமைகள் உண்டு என்று நிர்ணயம் செய்கிறார். வெற்றி பெற்ற இடங்கையார் வெற்றிக் காணிக்கையாக 1500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் உத்தர விடுகிறார். இந்த விசாரணை 5.2.1797இல் நடைபெற்றுள்ளது.

திப்புவின் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டுக் கிராமங்களில் அமுலுதார், சேனபாகம், சிரஸ்தார் ஆகிய மூன்று அதிகாரிகள் இருந்தனர். அமுலுதார் பெரும்பாலும் இசுலாமியராகவே இருந்தனர். மற்றவர் பெரும்பாலும் அந்தணராக இருந்தனர். விசயமங்கலம், அறச்சலூர், துடுப்பதி, ஊத்துக்குளி அதிகாரிகள் பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன. திப்புவின் நிருவாகம் பற்றி அறிய இப்பட்டயம் மிகவும் உதவுகிறது.

என

இடங்கையர்க்குச் செங்குந்தர் தலைமை தாங்கியதால் இந்த ஓலைப்பட்டயம் செங்குந்தர் செங்குந்தர் வெற்றிப் பட்டயம் அழைக்கப்படுகிறது. பல ஊர்க் கவுண்டர்கள் முன்னிலையில்