பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் ஈரோடு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய நான் 1982, பிப்ரவரி மாதம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல்- கல்வெட்டியல் துறையில் பணிக்குச் சேர்ந்த பின்னர் கள ஆய்வு செல்லும்போது பல ஸ்லாமிய வரலாற்று ஆவணங்களைப் பார்க்க நேர்ந்தது. அதிராம்பட்டினம் செப்பேடு, புதுக்கோட்டைப் பதக்கம், திருவறம்பூர் ஓலை ஆவணம் போன்றவை பல எங்கள் துறைக்கே ஆய்வுக்கு வந்தன. காயல்பட்டினத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பேராளராகப் பதிவு செய்துகொண்டு பேராசிரியர் வானமாமலை அவர்கள் வெளியிட்ட 'கான்சாகிபு சண்டை' என்ற நூல் பற்றி ஆய்வுரை நிகழ்த்தச் சென்றேன். என் நலன் விசாரித்த டாக்டர் கேப்டன் அமீர் அலி அவர்கள் "இத்தலைப்பில் அச்சிட்ட நூல் இருப்பதால் யார் வேண்டுமானாலும் இத்தலைப்பில் பேசலாம். சின்ன மெக்கா என நாங்கள் அழைக்கும் இக்காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல், தர்காக்களில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. முடிந்தால் அவைகளைப் பார்த்து அவை பற்றிப் பேசுங்கள்” என்று அன்புடன் கூறினார். அவற்றைப் பார்வையிட்டு அன்று மாலையே மாநாட்டில் காயல்பட்டினம் கல்வெட்டுக்கள்' என்ற தலைப்பில் பேசினேன். எனது உரையைப் பலரும் பாராட்டினர். அந்த ஆர்வத்தால் தொடர்ந்து இஸ்லாமிய ஆவணங்களின் தொகுப்பைத் தொடங்கினேன். புதுக்கோட்டை, ராஜகிரி, சென்னை, கீழக்கரை, கொழும்பு போன்ற பல ஊர்களில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் பற்றி உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. டாக்டர் கேப்டன் அமீர் அலி அவர்கள் இளையாங்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரிக்கு இருமுறை அழைத்து இஸ்லாமிய ஆவணங்கள் பற்றிப் பேசுமாறு பணித்தார்கள். அதனைக் கல்லூரி மலரில் அச்சிட்டார்கள். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், குன்றக்குடி அடிகளாரின் திருவருள் பேரவை, தமிழ்ப் பல்கலைக்கழகம் (அறக்கட்டளைப் பொழிவு) ஆகியவற்றிலும் இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. சில கல்வெட்டு ஆய்வாளர்கள் தாங்கள் கண்டுபிடித்த அரிய இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களைத் தமிழகத் தொல்லியல்