பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் குறு நில வேந்தர் இருத்தற்கேற்ப அமிர்தகவிராயர் (208) செம்பியன், செம்பியாள், (219) அபயரகுநாத்சேதுபதி அநபாயன் ரகுநாதன், (242) புனற் சென்னிக்குஞ் சென்னியெனும் ரகுநா தன் எனக்கூறுதல்காண்க. இரவிகுலமென்பதுபற்றி மனு,சிபி முதலிய வேந்தர்பெயர்களை சோழர்கிட்டுவழங்கி யாங்கு, அச்சோழர்குறுப்பாய்ச்சிறந்த நலம்பற்றி இரவி குலத்தவராகக்கொண்டு, அக்குலத்துதித்த னிவீரனும் பிற் காலத்து இவர்காவலிற்பட்ட புண்ணியசேதுவைப்பண்ணி யோனுமாகிய சீராமமூர்த்திபெயரே இவர்க்குப்பெயராக வைத்து ரகுநாதசேதுபதியெனச்சிறப்பித்து வழங்கினர் போலும். 114 காண்க. குலம்பற்றி இராஜசூரியசேதுபதி எனப்பட்டாரும் இவ் வழியிலுண்டு. இவர் பெயரான் இந்நாட்டில் இன்றைக்கும் இராஜசூரியமடையென ஒரு 'சிற்றூர்வழங்கப்படுதலுங் இவரைப்படைவீரராகக்கொண்டு சிறந்த சோழ அரசர் பெயரும் இவர்பாற்காண்டலால், ஈண்டைச்சூரியன் என்பதும் சோழன்பெயராமெனினும் அமையும். இதனைச் "சூரியன் புனனாடன் சோழன் பெயரே" என்னும் பிங்கல நிகண்டாலுமறிக. கண்டநாடுகொண்டு கொண்டநாடு கொடாதான்” என்னும் பட்டம்பெற்றுக் குலோத்துங்க சேதுபதியென்னும் பெயரான் விளங்கினார் ஒருவரு ராத . .. லானே இஃதறியப்படும். சோழன்மறவனாகிய பண்ணன் பெயர்வழக்கும். காவிரிவடகரையிலுள்ள அவன் ஊராகிய சிறுகுடியின் பெயர்வழக்கும் இவர் குடியேறிய இந்நாட்டில் இன்றைக் கும் காணலாகும். விரையாதகண்டனென்பது சேதுநாட்டு இராஜசிங்கமங்கல சேகரத்துள்ளது. அச்சேகரத்துப் பண்ணக்கோட்டையெனவும், சிறுகுடியெனவும் வழங்கும் ஊர்கள் இரண்டு உள்ளன. சோழகுலத்தோரைத் தொண்டி யோர் என வழங்குவர் என்பதும், அத்தொண்டி என்னும்பதி கூடற்குக் குண திசைக்கண்ணுள்ளதென்பதும், "வங்க வீட்டத்துத் தொண்