பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 ரா.இராகவய்யங்கார் இச்சேதுபதிகளுக்குச் சிறந்த கொற்றக்குடை செங்குடை யாகும். இவரது பெருவீரத்துக்கு அறிகுறியாய நிறம் செம்மையேயாதலால், இவர் தங்குடையைச் செந்நிறத்த தாகக் கொண்டனராவர். என செந்நிறம் எய்தற்பொருட்டுச் செவ்விய காவிக்கற் றோய்க்கப்பெறுதலால், இது செங்காவிக்குடை எனப் படும், "நங்காமதேனு வென்வந்த கார்செம்பி நாடனுயர், செங்காவி யங்குடை யான் ரகுநாதன்' என்றார் ஒருதுறைக் கோவையினும். குடைவகையிற் செங்குடை ஒன்றுண்டு என்பதனைச் செங்குடை மீயையுஞ் சிந்தூரமு மாகும்' எனவரும் பிங்கல நிகண்டானுமறிக. தந்நிலை யிற்றாழாமையும் தாழவரினுயிர் வாழாமையுமாகிய மானத் தையே தலையாய்ச் சிறப்பித்தோம்புதற்கு அறிகுறியாகக், கவரிமானின் மயிரை இவரது செங்குடைக் காம்பின்றலை யிற் சூட்டுவது இவர்க்குத் தொன்று தொட்டுவந்த வழக்கம். "மயிர்நீப்பின் வாழாக் கவரிமாவன்னா. ருயிர்நீப்பர் மானம் வரின்" என்றார் திருவள்ளுவனாரும். இவரது வெற்றிக்கொடியும் செங்காவிக்கொடி யென்ப துறைக்கோவையிற் கருடக்கொடியும், அநுமக்கொடியுமே இவர்க்குளவாகக் கூறப்பட்டன. 'ககராசவீரவெங் கேதனத்தான்’ 'கருடவெங்கேதனத் தளவாய்' 'தூதே நடந்த கவிகுல மாமணி தோன்றுகொடி மீதே யுயர்ந்த ரகு நாயன்' என வருதல் காண்க. திருவுடை மன்ன ரெல்லாம் திருமால் கூறாவர் என்பது பற்றியும், ரகுநாதன் எனப்பாடம் புனைதல்பற்றி யும் இவ்விரு கொடிகளையும் தமக்குரியனவாக கொண்டன ராவர். இவர் சூரியகுலத்தவதரித்த தோலாத தனிவீரத் திருப்பெயராகிய விஜயரகுநாதன் என்பதே தமக்குரிய சிறப்புப் பெயராகச் சூடியதும் வீரவென்றி பற்றியதே யாகும்.