பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 தமிழகக் குறுநில வேந்தர் பழைய ஊரும் உண்டு. இப்பக்கத்தைத்தரங்கினி நூலிலும் "துவராதீஷுப்ரதேசேஷு” துவாரா முதலிய பல இடங் களில் ஈசானதேவி என்னும் அரசி மாதரு காசக்கரக் கோயிலெடுத்தான் (Stein Rajatharangini 1, 122) எனக் கேட்கப்படுதலாலும், ஆதியில் பிரயை நீரினின்று ஆதி வராஹமூர்த்தி உலகைத்தன் கொம்பினெடுத்து நிறுத்திய வாயில் (துவாரம்) உடைமையானும் இம்மலைக் கண் வாயிலேதான் இவ்வரசர் தொன்றுதொட்டு வழிபடும் ஆதி வராஹ மூலக்ஷேத்ரம் இருத்தலானும், வேள்நதியாகிய விதஸ்தாவுடைய பரிசுத்த பூமி, துவாரவதி எனப் பெயர் பெறுவதற்கு உள்ள இயைபெல்லாம் உணர்ந்து கொள்ள லாம். ஆல்பெருனி என்பவர் வராஹமூலத்தைத் "துவார்" என வழங்கினார். அவரிதனைக் காவற்படை வீடெனக் கூறினார். (அல்புரூனி, India, ! பு. 207) புறப்பாட்டுரை காரர் "துவராபதி யென்னும் படை வீட்டை அண்டு" என்றார். இதனால் துவரையாண்ட என்றது, இந்தத் துவாரவதிநாட்டின் கண்ணுள்ள துவாரவதி என்றதலத்தை யாண்ட என்று கருதியதாகக்கொள்க. இந்நாடா டாளும் அரசர் தாம் இறக்குந் தருணத்திற்கு முன் இங்கு வந்து வதிதல் கேட்கப் படுதலானும் இதன் பழமையும், தூய்மையும், உயர்வும் உய்த்துணரலாகும். 'துவரை யாண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிர் என்றது, இத்துவாரவதியை அரசாண்ட நாற்பத் தொன்பது வழிமுறையில் வந்த 'வேள் குலத்தவர்" என்ற வாறாம். வேள்புலம் ஆண்ட அரசருள் 49-ம் வழிமுறையில் வந்தவன் ஜலெளகன் எனப் பெயர் சிறந்தவன். நீல நாகனை முதலாகவுடைய முன்னையரசர் ஐம்பத்திருவர் பாரத குரு பாண்டவர் காலத்திற்கு முந்தியவரென்று பெயருங்கூறாது கச்மீர சரித்திரங்கள் வாளா ஒழிதலான், இவரைப் பெருவேந்தராகக் கொள்ளாது. பாரத காலத் தவனான கோநந்தன் முதலாகவே கணக்கிட்டுக் கூறுதல் பற்றித் தெரிந்த அளவிற் சரிதங்கண்டு இங்ஙனம் கூறினா