பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் 27 ஈவோன் பெருஞ்செயலை அவ்வழி முன்னோர் பலர்க்கும் வைத்துக் கூறுதல் "தூங்கெயிலெ றிந்தனரிங்கனோர்" (புறம்-39) எனப்பாடுதலானறிய லாம். தூங்கெயிலெறிந்த சோழன் ஒருவனேயாக (சிலப்) ஈண்டு எறிந்தமை என முன்னையர் எல்லோர்க்கும் ஏற்றுதல் கொண்டு இவ்வழக்கின் உண்மை தெளியலாம். அவ்வேளிருள் இருங்கோவெனப் பெயர் சிறந்தான் இவனென்க. 'சேட்டிறாங்கோவே" என அழைத்தல் காண்க. இதன்கட் புளிகடிமாஅல் என்றது புலிக்கொடி யைக் கடிந்தாமல் என்று இதனாற் புலிக்கொடியையுடைய சோழர்க்கு இவன் பகைவனாதல் குறித்தார். இவ்வேள் புலச்சளுக்கரைச் சோழன் வென்றபோது, 'கொடியணி யேனம் பொடியணிந்து கிடப்ப வடதிசை வாகைசூடி" (தொல்.பொருள்) எனப் பாடுதலாலும் இப்பகைமை அறியலாம். அரசொடு பொருதலைக் கொடியோடு பொருதலாகக் கூறுவது தமிழ் வழக்கேயென்பது. “பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடத்தை ஏந்து கோட்டியானை இசை வெங்கிள்ளி'" (நற்றிணை-141) என்று வருதலானறியலாம். இதன்கண் பாண்டில் என்றது பல்லவன் எருத்துக் கொடியை என அறிக. புலி, ஏனம், பாண்டில் மூன்றும் முறையே சோழர், சளுக்கர், பல்லவர் கொடியாதலுணர்க. இருங்கோவேள் குடிக்கும், சோழர் குடிக்கும் பகைமை உண்டென்பது, பட்டினப்பாலையுள் திருமாவளவன் " 'இருங்கோவேள் மருங்குசாய" வென்றுன் எனக்கூறுதலாலும் அறியலாம். இப்பகைமை இவ்விரு குடிக்கு நெடுநாள் தொட்டு உண்டாயதென்பது மிகப் வழைய கச்மீர வேந்தனான மிஹிரகுலன் என்பான்- தெற்கட் படையெடுத்து வந்து இலங்கையை வென்று மீள்பவன், சோளர், கருநாடர், இலாடர் என்பாரைத் "