பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 (vide தமிழகக் குறுநில வேந்தர் vol. II, 336) தென்னாட்டை விட்டு வேற் றரசர் நாட்டுப் புக்கிருந்தனனென்று தரங்கினி நூல் கூறுதலான் இவனிருந்த துர்க்காசளிகா கச்மீரத்திலிருப்ப தாக நினைப்பது பொருந்தாததாகும். ஏழில் மலை இனிச் சங்க நூல்கள் தென்னாட்டுக் கொண்கானத்துள் ஏழில்மலை என்று ஒன்றுண்டென்றும் அதன்கண் துர்க்கை கோயிலுண்டென்றும் அங்கே இப்பழைய வேளிர் அள விறத்த பொன்னைப் புதைத்து வைத்திருந்தனரென்றும் அம்மலையில் நன்னன் என்னும் வேள் சிறந்து விளங்கினன் என்றும் அவன் மரபினர் அவ்வேழின்மலையிற் கானமர் செல்வியை (துர்க்கையை) வழிப்பட்டுப் பல நல்ல குதிரைப் படையை பெற்றிருந்தனரென்றும் கூறுதல் காணலாம். இம்மலையில் முதலிலிருந்த வேளிர் வேந்தன் குருடன் என்பது “இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயும் அன்று நீன் குற்ற-மருள்தீர்ந்த பாட்டு முரையும் பயிலா தன இரண்டு ஓட்டைச் செவியு முள' என்பதனாலறியக் கிடப்பது. இஃதேழிற் கோவை ஒளவை பாடியது என்று பேராசிரியரும் நச்சினார்க்கினியருங் கூறு வர். (தொல். செய், 127) இப்பாடல் இவ்வேள் மரபின் வேந்தன் குருடன் என்பது பற்றி அக்குருட்டுத் தன்மை யுடன் பாட்டுமுரையும் பயிலாச் செவியையுஞ் சேர்த்து இழித்தது ஆகும், ஏழில் மலை என்பது ஸப்த மாத்ருகா கோயில்களையுடைய மலையெனின் நன்கு பொருந்தும். இவ்வேழில்மலையடியில் மாதாய் என்னுந் துர்க்கை கோயிலும் ஆண்டு ஸப்தமாத்ருகா பிம்பங்களும் உண்மை இன்றுங் காணலாம். இந்த ஸப்த மாத்ருகா வழிபாடு காச்மீரத்துப் பண்டைக் காலத்துமிங்கிருந்ததென்றும் அம் மூர்த்தங்களுளெல்லாம் மிகவுயர்ந்ததுவராசிவடி வென்றுஞ்