பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 தமிழகக் குறுநில வேந்தர் மக்கள் ஆதலால் இவர்க்கு அரசன் பஞ்சசனேந்த்ரன் என்று சிறப்புப் பெயர் புனைவன் தரங்கினி II!. 353) ஆதல் காணலாம். கச்மீர தேய ஆட்சி ஐந்து குலத்தவர்க்கே உரித் தாதல் தரங்கினியால் அறியலாம். அவை கோநந்தகுலம், பிரதாபதித்த குலம், கார்க்கோடக குலம், உத்பல குலம், வோஹரகுலம் என வரும். இப்பிரிவும் ஐம்பெரு வேளிர் என்றற் கியைதல் காண்க. இங்குக் கூறிய குலங்களான, கார்க்கோட குலம், நாக குலமேயாதல் வெளிப்படையாம். இவையெல்லாம் தென்னாட்டிற்கும் வடபான் முனிவன்றட வாகிய ஸ்தீஸரஸுடைய கச்மீரத்திற்கும் உள்ள பண்டைத் தொடர்பை நன்கு தெளிவித்தல் கண்டு கொள்க. கச்மீர மொழியில் ஆவி என்பது பாம்பிற்குப் பெயராதலுங் காண்க. முடிவுரை: தமிழரசரும் வேளிரும் காலந்தெளிந்த சரித்திர முறை யில் அசோக சக்கரவர்த்தி (274 B.C)க்கும் காரவேலா வேந்தனுக்கும் (186 ஹத்திகும்பா சாசனம்) முற்பட்டு நன்னிலையில் ஒற்றுமையாய் வாழ்ந்தவர் என்பது சாசனங் களால் நன்கு கண்டது. காலம் நன்கு தெளியப்படாத சீராமமூர்த்திக்கும் கண்ணபிரானுக்கும் முற்பட்டுத் தமிழர சருண்மை முறையே வான்மீகத்தும் வியாச பாரதத்தும் நன்கறிந்ததாகும். இவற்றிற்கெல்லாம் இயையக் கொள்ளின் அகத்தியருடன் வந்த வேளிர் ஆதியில் வாழ்ந்த தலம் கச்மீரத்துள்ள வராகத்துவாரவதியேயாமென்று நன்கு தெரிந்து கொள்க. கபிலர் பாடலிற் குறித்த 'உவரா வீகைத்துவரை” ஜலௌகனுடைய தாய்க்கிறிஸ்து பிறத் தற்கு 137 ஆண்டு முற்பட்டலான், சங்க காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு மலையாமை கண்டு கொள்க.