பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் 67 இத்தொடர்பு அவ்வரசற்கும் இக் கோசர்க்குமுள்ள குடிப் பிறப் பொற்றுமையே ஆமெனின் நன்கு பொருந்தும். உற்றுழி யுதவுவேம் என்று தம்மினத்தவனான மோகூர் மன்னன் பழையனுக்குரைத்த வண்ணம் அவன் அவை. யகம் விளங்க வந்து தோன்றி உதவியதனையே குறிப்பதென்று நன்குணரலாம். து இவ்வுதவி மோரியர் தென்றிசையில் வடுகரை முன்னுறவிட்டுப் படையெடுத்து வந்தபோது மோகூர் அவர்க்குப் பணியாமல் எதிர்த்து நின்ற நிலையில் அம் மோகூர்க்குத் துணையாக அவர் ஆலம்பலத்துச் சமயத்துத் தோன்றிப் பகைப் படையைச் சிதைத்ததனையே குறிப்ப தென்பது; "பறைபடப் பணில மார்ப்ப விறை கொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயாகின்றே" (குறுந். 15) எனவும், "வெல்' கொடித், துனைகா லன்ன புனைதேர் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்கு வெள்ளருவிய வறைவா யும்பர்" (அகம். 251 எனவும், 'முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத் தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறையிறந் தவரோ சென்றனர்” (அகம்.281)