பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 என்று தமிழகக் குறுநில வேந்தர் பொருளாதல் காண்க. கொண்கானம் கடற்காடு என்னும் பொருளாதல் காண்க. கொண்காணங் கிழான் என்பது தொன்னூல் வழக்கு. கொண்கன் என்னும் பெயர்க்குக் கடற்சேர்ப்பன் என்னும் பொருணோக்கி யறிக. இதற் கியையவே அமராவதி ஸ்தூப சாசனம், ஸீம்ம வர்மன் பாகீரதியைக் கடந்து. கோதாவரியைக் கடந்து, கிருஷ்ணவேணியைக் கடந்து தானிய கடகம் (Dronakotta) என்னுமிடத்து, பவத்விஷனான வீதராகனைத் தரிசித்தான் எனக் கூறுதல் கண்டுகொள்க. இதன்கண் பாகீரதியைக் கடந்து என்றதனால் இவன் முன்னோர். கங்கை வடகரை யிலிருந்தது நன்கு புலனாகும். இது பாரதக் கதையொடு மியைதல் காண்க. இதனால் இப் பல்லவகுலம் கடல்கெழு செல்வி யடியாக வந்த துரோணர் மரபாதல் நன்கு தெளிக. இப் பல்லவர் சாசன வரலாற்றோடு பொருந்தவே இவ் விளந்திரையனைப் பாடிய பழம் பாடலில். "மாக்கட லார்ப்பதூஉம் - கடுமான் திரையனை யான் பயந்தே னென்னுஞ் செருக்கு" என்றதனால் இக் குடித்தோற்றம் முதன்முதல் கடலிடத்த தாதல் துணியப்படும். அத்தோற்றம் அப்ஸரஸினின்று இ குடி தோன்றிற்றென்னும் பாரத வரலாற்றிற்கும் சாசன வரலாற்றிற்கும் இனிதியைந்து விளங்குதல் கண்டு கொள்க. இவ் வுண்மையை இவ்வுருத்திரங் கண்ணனார், 'முரசு முழங்கு தானை மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும் வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த வறம்புரி செங்கோற் பல்வேற் றிரையன்” என்பவற்றால் இனிது விளக்கினார்.