85
மாரியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் முதலிய பெண் தெய்வங்களின் கொடை விழாக்கள் நடைபெறும் பொழுது பத்து நாட்கள் தொடர்ந்து கும்மி பெண்களால் நடத்தப் படுகிறது: தமிழ் நாட்டில் பல ஊர்களில் இது நடைபெறுகிறது பூப்பெய்திய பெண்கள் வீட்டிலும் சில நாட்கள் நடக்கும். பொங்கலுக்கு மறுநாளைக் காட்டுப் பொங்கலாகவும் காணும் பொங்கலாகவும் மக்கள் கொண்டாடுகின்றனர். ‘அன்று கும்மியடித்து மகிழும் வழக்கம் பல ஊர்களில் உள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள மாவடியில் ஆண்டு தோறும் காட்டுப் பொங்கல் ஊர் மக்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று ஊர் மக்கள் குடும்பம் குடும்ப மாகப் பக்கத்திலிருக்கும் மலைப் பகுதிகளான நம்பிக்கோவில் மலை, தண்ணீர்த் தொண்டு, நெல்லித்தோப்பு, பனங்காய் உருளி ஆகிய இடங்களுக்குச் செல்வர். அங்கு பொங்கலும் விருந்தும் மிகச் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஒன்று கூடிக் கும்மியடித்து பாடுவது வழக்கம். கலைநலம் கவின கும்மியடித்து அனைவரையும் மகிழ்விப்பார்கள். அவர்கள் பாடும் பாடல்கள் மிகுதியும் இறை வாழ்த்தாகவே இருக்கும். சில சமயம் நகைச் சுவைப் பாடல்களைப் பாடுவதும் உண்டு. இன்பக் களிப்பாக நடைபெறும் கும்மி ஊர்மக்களை உவகையில் ஆழ்த்தும்.
அம்மன் கோயில் திருவிழாக்களில் 'முளைப்பாரி என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். மக்கள் 18 வகைத் தானியங்களை முளையிடச் செய்வர். அது பத்து நாள் பருவம் அடைந்ததும் கோயிலுக்கு எடுத்து வருவர். புனிதமாகக் கருதி விழா நடக்கும் இடத்தில் ஒரு வெளியிடத்தில் முளைப்பாரி வைக்கப்படும் முதல் 9 நாட்கள் அதைச் சுற்றிப் பெண்கள் கும்மியடித்து பாடுவார்கள். அவர்களுடைய பாடல் இனிமையாகவும் பொருள் சிறப்புடையதாகவும் இருக்கும்.)
என்
'ஒண்ணாங் கிழமை யன்னிக்கு ஓரிலையாம் முளைப்பாரி இரண்டாங் கிழமை யன்னிக்கு இரண்டிலையாம் - முளைப்பாரி மூன்றாங் கிழமை யன்னிக்கு மூன்றிலையாம் முளைப்பாரி முளைப்பாரி
நாலாங் கிழமை யன்னிக்கு மூன்றிலையாம்
றவாறு ஒன்பது நாளைக்கும் பாடுவர் இறுதியாகப்
'பத்தாங் கிழமை யன்னிக்குப் பதமே யடைந்திடுமே'
என்று பாடி முடிப்பர் பாடல் மெட்டு 'தானானே தானானே' என்ற அமைப்பில் இருக்கும். பத்தாம் நாள் விழா நடந்தேறும்