94
வழிபடுவதாக இந்த நடனம் ஆடப் படுகிறது. வைகுண்ட சுவாமியை வழிபடுவோர் பல பதிகளையும் நிழல்தங்கல்களையும் (எணத்தாங்கோயில் என்பது சிதைந்த வழக்கு) இந்த இரண்டு மாவட்டங்களிலும் பல இடங்களில் கட்டியிருக்கிறார்கள். அவற்றிலிருக்கும் கருவறையின் முன்பிரிக்கும் இடத்தில் திரு நடனம் ஆடுவது வழக்கம். கொடிமரம் இருக்கும் கோயில்களில் அதைச் சுற்றியும் ஆடுவர்.
.
நடனத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அரையிலும் தலையிலும் காவியாடை கட்டியிருப்பர். நெற்றியில் நேர் நாமம் இட்டிருப்பர். கழுத்தில் உருத்திராக்க மாலைகளை அணிந்திருப்பார்கள். கையில் ஒரு நீண்ட பிரம்பைப் பிடித்துக் கொண்டு வலப்புறமாகச் சுற்றிச் சுற்றி வந்தவாறு ஆடுவர். இறைவனை வேண்டிப் பாடுவார்கள். சரவிளக்கு இயற்றப் பட்டிருக்கும். இறைவனை மாத்திரமே நினைத்து ஆடுவதினால் இதனைத் திருநடனம் என்று சிறப்பாக அழைக்கிறார்கள். நடனம் ஆடுவோர் பலவிதமான நோன்பு முறைகளைக் கைக் கொண்டவர்களாக இருப்பர்.
இந்த ஆடல் முறைக்கு வழிவகுத்த பெரியார் குமரியைச் சேர்ந்த முத்துக்குட்டி சுவாமியாவார். தன்னுடைய இறை யுணர்வில் பல அனுபவங்களைப் பெற்று இந்த முறையில் திருநடனம் ஆட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு விளக்கை மத்தியில் வைத்து ஆடும் வழக்கமும் உண்டு. இது பாகவத நடனம் போன்றே நடைபெறுகிறது. இந்த நடனத்தை ஆடும் மக்கள் நாட்டுப்புறத்தைச் சேர்ந்தவர்கள். வாழ்க்கை வாழ்கிறவர்கள். ஆனால் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். இறையருள் வேண்டலைத் தவிர வேறு எந்த விதமான நோக்கமும் இந்த ஆடலுக்கு இல்லை.
எளிய
இவ்வாறு வட்டமாகச் சுற்றி ஆடி வழிபாடு செய்யும் வழக்கம் இமாசலப் பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், வங்காளம், ஒரிசா, ஆசாம், திரிபுரா, கர்னாடகம் ஆகிய மாவட்டங்களிலும் உண்டு. அங்கு நாட்டப் பெற்றுள்ள கம்பைச் சுற்றி ஆடியுள்ளனர். திருநடனத்தில் கொடிமரத்தைச் சுற்றி ஆடும் பழக்கம் இதனுடன் ஒப்பிட்டுக் காணத்தக்கது இக்காலத்தில் வட மாநிலங்களில் தண்டேஸ்வரி அல்லது தனலெஷ்மி போன்ற தெய்வ உருவங்களைச் சுற்றி வழிபாட்டு