உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




97

வளத்தின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகக் குதிரை மதிக்கப்பட்டுள்ளது. ஆரியருடைய வருகைக்கு முன்பே பழக்கப் பட்ட குதிரைகளை ஹராப்பாவிலுள்ள மக்கள் சிறப் பாகக் கருதியுள்ளனர். அங்கு கிடைத்துள்ள மண் குதிரை உருவங்களிலிருந்து இந்த உண்மையை அறியலாம். பீலர் என்ற பழங்குடியினர். மனிதனுடைய உயிர் குதிரையின் மீதேறி மேலுலகம் செல்லும் என்று நம்பினர். அதை குறிக்கும் உருவங் களை வடித்துள்ளனர். குதிரையை ஒரு புனிதமான விலங்காகக் கருதினர். மண்ணுலகை விண்ணுலகுடன் இணைக்கும் விசைக் கருவியாகக் குதிரையைப் பீலர்கள் மதித்துள்ளனர். இதை நிரூபிக்கும் பழங்கதைகளும் அவர்களிடையே உலவுகிறது. தமிழர்கள் சிறப்பாக மதித்து வழிபடும் தெய்வமான ஐயனாருக்கும் குதிரைக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளதை அனைவரும் அறிவர். ரிக் வேதத்திலும் குதிரை புனிதமாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது. தீமையிலிருந்து காக்கும் ஏழு கன்னியருக்கும் குதிரை செய்து கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. மழைவளம் தரும் வருணனுக்கு ஆரியர்கள் குதிரைப் பலி கொடுத்துள்ள குறிப்புகளும் காணப்படுகிறது. சில பழங்குடியினர் குதிரைகள் இல்லாமல் சமயச் சடங்குகளை நடத்துவதில்லை. அந்த அளவுக்குக் குதிரை அவர்களுடைய மனத்தில் சிறப்பும் உயர்வும் பெற்றுள்ளது. குதிரை வளத்தையும் வாழ்வையும் தருவதாக முன்காலத்திலிருந்தே மக்கள் நம்பி யுள்ளனர். நினைத்தவை நடப்பதற்காகவும் குதிரைவுருவை வழி பட்டிருக்கின்றனர்.

வங்காளத்தில் நடைபெறும் கம்பீரா விழாவில் சிவபெரு மானின் பூதகணங்கள் குதிரைகளில் ஊர்ந்து வருவதாகவே ஊர்வலம் நடைபெறும். நாட்டுப்புறத் தெய்வங்கள் ஆணானாலும் பெண்ணானாலும் அவர்களுக்குக் குதிரைகளைக் கொடுப்பது இந்நாட்டாரின் தொன்று தொட்ட வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.6 தென் இந்தியாவில் குறிப்பாக மலபாரில்

(4) Maria Leach Ed, Folklore Mythology and Legend, New English Library, (London, 1975)

P. 504

(5) Stella Kramrisch Unknown India, Rural Art in Tribe aud Village, (Philadelphia, 1968) p.51 (6) A.Bhattacharya, "The Cult of the Village Gods of West Bengal, Man in India, XXXV, (Calcutta, 1955) p.19-33.