உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

இவைதவிர பள்ளத்தூர் சோலையாண்டவர், கல்லூர்ராய வரம் ஐயனார், வேலங்குடி கருப்பர், வலையப்படி செங்கிடாக் கருப்பபன், கீழ்காய் ()ெ நல்லிக் கோட்டை பெத்த பெருமாள் போன்ற ஆண் தெய்வங்களும் வணங்கப் பெறுகிறார்கள்.

அங்குள்ள அம்மன் கோயில்களில் ஏழு அல்லது எட்டு நாட்கள் கூத்து வழிபாட்டுடன் தொடர்புள்ள நிலையில் நடத்தப்படுகிறது. இப்பொழுது மூன்று நாட்களாகி அதைக் குறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்தங்குடி,கல்லூர் ராயவரம் போன்ற ஊர் விழாக்களில் மஞ்சு விரட்டு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் காளைகள் வரை யிலும் மஞ்சு விரட்டில் கலந்து கொள்வதாக அறிய முடிகிறது. அம்மன் பொட்டலிலிருந்து சாமியழைத்து மஞ்சு விரட்டுப் பொட்டல் வரைச் சுமார் ஒரு கல் தொலைவு வருவது நல்ல விழாக் காட்சியாக அமையும். கோட்டையூர், கொத்தடி முதலிய இடங்களில் பால்குடம் எடுத்துத் தெய்வத்தை வழிபடுவர் இதை 'மதுயெடுத்தல்' என்று அழைக்கிறார்கள். வேலங்குடி கருப்பர் கோயிலுக்கு ஏழுஊர்களிலிருந்து ஊருக்கு மூன்று மண்பானைகள் வீதம் இருபத்தொரு பானைகளைத் தலையில் எடுத்துவரும் வழக்கம் உள்ளது. கருப்பர் என்ற பெயருடன் பல தெய்வங்கள் உள்ளனர். அவர்கள் அரிவாளைக் கையிலெடுத்து வெறியுடன் ஆடுவது அனைவரையும் அச்சமுற்று ஒதுங்கச் செய்யும்.

இராமநாதபுரம்

காவல்

மாவட்டத்தின் தென்பகுதியிலிருக்கும் சிவகாசியில் காச்சக்கார அம்மன் கோயிலிருக்கிறது.

இந்த

சுண்ட

அம்மன் காய்ச்சல் நோய் தீர்க்கும் ஆற்றலுடையவள் என்று மக்கள் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் அங்கு வற்றல் ரசம் வைத்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அதற்குக் காரணமான ஒரு வரலாறும் கூறப்படுகிறது.

சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமரிப் பகுதியிலிருந்து பொதிமாட்டின் மூலம் வாணிபம் செய்வதற் காகச் சிவகாசிக்கு மக்கள் வருவது வழக்கம். அவ்வாறு வாணிபப் பொருட்டாக வந்த ஒருவருக்குக் காய்ச்சல் நோய் (சுரம்) கண்டது. மனைவி மிகவும் வருந்திப் பகல் முழுவதும் கண்ணீருடன் பத்திரகாளி அம்மனின் அருளை வேண்டி அழுதாள் இரவில் அம்மன் அவளுடைய கனவில் தோன்றிக் காலையில் பொங்கலுடன் சுண்டவற்றல் ரசம் கலந்து உண்வூட்டி நோயக லும் வழிகாட்டி மறைந்தாள். அந்தப் பெண் அவ்வாறு செய்ய வும் 'கணவனுடைய காய்ச்சல் காற்றாகப் பறந்துவிட்டதாம்,