உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொன்ம விளக்கக் கலைகள்

தொன்ம விளக்கம்

பழமையான தெய்வக் கதைகளை விளக்கும் போக்குடைய நாட்டுப்புறக் கலைகள் பலவாறாகத் தமிழ் நாட்டில் வளர்ந் துள்ளன. இதிகாசம், புராணம், தெய்வ வரலாற்றுக் கதைகள் ஆகியவற்றைத் தொன்மமாகக் கருதலாம். அவற்றில் உலக இயல்புகளும் அவற்றிற்கு அப்பாற்பட்ட இயல்புகளும் இடம் பெறும். வாழ்வுக்குப் பயன்படும் செய்திகளும் இன்பமளிக்கும் சுவைப் பகுதிகளும் இருக்கும். மெய்ம்மையும், பொய்ம்மையும் கலந்து நன்மைக்கு வழி வகுப்பதாக இருப்பின் ஏற்றுக் கொள் வதில் தவறில்லை. மக்களைத் திசை மாற்றிச் செல்லும் கதை களும் இருக்கலாம். முறைப்படுத்தும் திறமுடைய நல்லவையும் காணப்படலாம். எவ்வாறு இருப்பினும் பழமையுடையதாக இருப்பதைத் தொன்மம் என்று கூறுகின்றனர்.

வழி வழியாக மக்களிடம் வழங்கி வரும் கதைகளை மக்கள் விரும்புவது இயல்பு. அவற்றை வாய்மொழிக் கதைகளாகக் கேட்பதைவிடவும் இசைக்கலையாகவோ கூத்துக்கலையாகவோ மெருகேற்றப்பட்டு சுவைப்பது சிறப்பாக அமையும். கதைப் பாடலாகியிருந்த பல கதைகள் குறிப்பிட்ட கலைகளுக்குத் தகுந்தவாறு இசைப் பாடல்களாகவும் கூத்துக்கு உதவும் அமைப் புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. அதனால் ஒரே கதையைப் பல கலைகள் மூலம் சுவைக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத் துள்ளது. எந்த நிலையிலும் கலையை விடவும் கதைகளுக்கே சிறப்பிடம் கொடுக்கப்படுகின்றன. கலைக்காகக் கதைகளை மாற்றும் பழக்கம் நாட்டுப்புற மக்களிடம் பெரும்பாலும் இருப்ப தில்லை. தெய்வக் கதைகள் என்ற நினைப்பில் அவற்றைப் பெரிதும் மதிக்கின்றனர். மாற்றங்களை விரும்புவதும் இல்லை. ஏற்றுக் கொள்வதும் இல்லை.

தெய்வக் கதைகளை உண்மையாக நம்பி உணர்ச்சியுடன் சுவைத்து மகிழும் போக்கை நாட்டுப்புற மக்களிடம் பரக்கக் காணலாம். ஆகையினால் அத்தகைய கதைகளும் மறைய வில்லை. கலைகளும் வழக்கிழக்கவில்லை. அவற்றிலுள்ள உண்மைகளைச் சோதிக்கவும் கருத்துக்களை அலசவும் மக்கள் முற்படுவது இல்லை. வழக்கமான கதைகளைப் பழக்கமான