உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




137

வில்லுப் பாட்டின் பெருமை பன்னெடுங் காலமாகத் தென் மாவட்டங்களில் பதுங்கிக் கிடந்தது. அதை வெளியுலகுக்குக் காட்டிய பெருமை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனையே சேரும். அவர் காந்திமகான் சரித்திரத்தை வில்லுப்பாட்டாக எழுதித் தமிழ்நாடு முழுவதும் பரப்பினார். திருவிதாங்கூர் தமிழ் நாட்டுக் காங்கிரஸ் நடத்திய தாய்த் தமிழ் நாட்டுடன் இணையும் போராட்ட வரலாற்றைத் தோப்பூர் சுப்பிரமணியம் வில்லில் பாடிக் குமரி மக்களைக் கவர்ந்தார். இன்று வில்லுப் பாட்டை வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, பேசும்படம் ஆகியவை நல்ல விளம்பரத்துடன் மக்களுக்கு அறிமுகப்படுத்து கின்றன. தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம், மக்கள் தொடர்பு செய்தித்துறை ஆகியவற்றின் நல்ல ஆதரவும் அதற்குக் கிடைத்துள்ளது. தெய்வக் கதை பாடுவதற்கே பயன் பட்ட வில்லிசை இன்று அறிவுக்கும் அரசியலுக்கும் நல்ல முறையில் உதவுகிறது.

வில்லுப் பாட்டுப் புலவராக

சென்ற நூற்றாண்டில் உசரவிளை அப்பாவுநாடார் (கம்பினிப்புலவர்) நெல்லை, குமரி மாவட்டங்களில் பேரும் புகழும் பெற்றார். அவர் பாடும் போதே தலையில் கும்பம் வைத்து ஆடியவாறு வில்லில் அடிப் பாராம். வாய்க்குள் பலவண்ணப் பவளங்களை இட்டு அவற்றை நூலில் கோர்த்து மாலையாக்குவாரம். இடத்துக்குத் தக்கவாறும் சமயத்துக்கு தகுந்தபடியும் பாடலை அந்த இடத் திலேயே கட்டி அழகாகப் பாடி மக்களின் பாராட்டுதலைப் பெறுவாராம். அவர் பாட இயலாத வயதடைந்தபின் அவரின் திறமைக்குக் காணிக்கையாகப் பின்னால் பாடிய புலவர்கள் அவருக்குப் பணம் கொடுத்துப் பாதம் பணிந்து விடைபெறு வதைக் காணும் வாய்ப்பு கிடைத்து. இந்த நூற்றாண்டில் தோவாளை சுந்தரம்பிள்ளை நாஞ்சில் நாட்டில் ஒப்பற்ற வில்லிசை மன்னராக விளங்கினார் பின்னர் பொட்டல் பொன்னு முத்துநாடார், அகத்தீசுவரம் அரிராமன்நாடார், நாகமணி நாடார், தங்கையா, கடுக்கரை கோலப்பிள்ளை, பிச்சை குட்டிப் புலவர். சேவல்குளம் தங்கையா ஆகியோர் புகழ் பெற்று விளங்கினர். நெல்லை மாவட்டத்தில் காரிகோயில் சுயம்பு புலவர், ஐயம்பிள்ளை, அழகம்மாள், ஆகியோர் நல்ல கலைஞர் கள். தவிரவும் கோயில்பட்டி, தூத்துக்குடி, ஆறுமுகநேரிப் பகுதிகளிலும் பலப் பாட்டுக்கலையில் திறமையுடைய வர்களாக விளங்குகின்றனர். கொத்த மங்கலம் விசு அக்கலையை நவீனப் படுத்தினார். பாடல்களைப் புதுமையுடன் பாடியதுடன்