உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

கடுமையாக நடைபெறும் முருகனின் வேல் எறிப்படும். அது சூரனின் மார்பில் குத்தி அவன் செத்து விழுவதாகக் காட்டுவர். இதுவே சூரன்பாடு திருவிழா. சூரன் வேல் பட்டு இறப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. 'பாடு' இறத்தல் என்று பொருள் பெறுகிறது. சூரன் படுதலினால் அது சூரன்பாடாகி உள்ளது.

மூன்று முகங்களால் மூவேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்து கின்றனர். முன்பின் நகர்வில் போராடலைக் காட்டுகின்றனர். திரும்பித் திரும்பிச் செல்வது சூரனின் வலிமை குறைந்து கொண்டு வருவதை விளக்குகிறது. சூரன் வேல்பட்டு விழுந்ததும் அவனுடைய உருவத்தை கிடந்த நிலையில் இழுத்துக் கொண்டு ஒரு வெளியிடத்துக்கு வருவர். அங்கு அனைவரும் காண அவனுடைய உருவம் தீயினால் கொளுத்தப் படும். மக்கள் தீயவன் அழிந்தான் என்று கருதுவர். இறை யாற்றல் வலிமையுடையது என்பதை நம்புவர். முருகனை அனைவரும் வாழ்த்தி வணங்கி வீடுகளுக்குத் திரும்புவர். இவ்வாறு சூரன்பாடு தமிழ்நாட்டில் பல முருகன் கோயில்களில் நடைபெறுவதாகக் கூறுகின்றனர். குமரியிலுள்ள மருங்கூரில் மிகச் சிறப்பாக இது கோயில் இருக்கும் குன்றின்மீது ஆண்டு தோறும் புரட்டாசியில் நடைபெறுகிறது. ஆயிரக் கணக்கில் மக்கள் கூடி சூரன் எரிந்து சாம்பலாகும் காட்சியைக் காண்பர். அந்தச் சாம்பலைப் புனிதமாகக் கருதி வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் வழக்கமும் உள்ளது.

நல்லதின் ஆற்றலால் தீயது அழிக்கப்படுவதை உருவகப் படுத்திக் கதையாகப் புராணம் கூறும். அக்கதையைக் கலைத் தன்மையுடன் காட்சிப்படுத்திக் கண்முன் கண்டு மக்கள் களிக் கின்றனர். இறையுணர்வும் கலையுணர்வும் கலந்த கலைக் காட்சிகள் பலவற்றை நாட்டுப்புற மக்கள் உருவாக்கி மகிழ் கின்றனர். கலையின் துணையால் இறையுணர்வை ஊட்டுவதே இதன் நோக்கம். புதைந்த கருத்தை அகழ்ந்து காண வியலாதோர் இக்காட்சியால் கண்ணிற்கு மாத்திரம் விருந்து பெற்று கருத்தை வறுமையாக்கித் திரும்புவர். நாட்டுப்புற மக்களில் பலர் இதனைக் காட்சியாகக் கருதாது இறை யாற்றலாகவே நம்புவதினால் இறையுணர்வு மிக்கவராக வீடு திரும்புகின்றனர்.

கணியான்

ட்டம்

சுடலைமாடன், இசக்கியம்மன், பிச்சைக் காலன், செங்கிடாக்காரன் ஆகிய கோயில் விழாக்களில் கணியான்