உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




145

ஆட்டம் தனியாகவும் சாமியாட்டத்துடனும் நடத்தப்படுகிறது. குமரி, நெல்லை மாவட்டங்களில் இந்த ஆட்டம் சிறப்புடைய தாகக் கருதப்படுகிறது. சுடலைமாடனுக்கும் கணியானுக்கும் மிக தொடர்பிருப்பதாகக் கதை கூறுகிறது. சிவபெருமான் இரண்டு முரடர்களைப் பிறப்பித்து பூவுலகுக்கு அனுப்பினார். அதில் ஒருவன் சுடலைமாடனாகவும் இன்னொருவன் கணியா னாகவும் பெயர் கொண்டு அலைந்தனர். கணியான் சுடலை மாடனுக்குப் பல வழிகளில் உதவி செய்கிறான். கொடுமை களுக்கு ஆதரவாக இருக்கிறான்.

கணியான் ஆட்டத்தின் ஒருபகுதி இக்கதையின் முக்கிய கருத்தை உருவகித்துக் காட்டுகிறது. தன் குருதி சிந்தி சுடலை மாடனுக்கு உதவுவதைக் காட்ட கணியான் ஒரு வியப்பான செயலை இன்றும் ஆட்டத்தின் நடுவில் செய்வதைக் காணலாம். நள்ளிரவில் சுடலைமாடன் கொடை வறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும். கணியான் ஆடிப்பாடுவான். சாமியாட்டம் துடிப்பாக நடக்கும். சுடலைமாடன் திடீரெனச் சுடலையை நோக்கி ஓடுவான். அவன் அங்கிருந்து திரும்பி வந்ததும் கணியான் தன் நாக்கு அல்லது விரலை ஒரு கத்தியால் அறுத்து அதில் வழியும் குருதியை ஒரு இலையில் தாங்கிச் சுடலை மாடனுக்குக் கொடுப்பான். சிலசமயம் குருதியை இருபத்தொரு இலைகளில் பங்கிட்டு முறைப்படிக் கொடுப்பதும் உண்டு. சாமி யாடுவோன் குருதியை நக்கி அருந்துவான்.

'குருதி கொடுத்து மாடனுக்கு உறுதியாக உதவும் கணியான் பருதி யிருக்கும் காலம் வரை இறுதி பின்றி வாழ்வானே'

என்ற பாடலையும் கேட்கலாம். இனிமை பாடல், சிறப்பான ஆடல், வியப்பான சொல் ஆகியவற்றால் நாட்டுப்புற மக்களை நாட்டமுடன் கணியான் ஆட்டம் கவர்கிறது. வெட்டிய இடத்தில் திருநீறு பூசுவர். ஆட்டமும் பாட்டும் அதற்கு மேலும் மிகச் சிறப்பாக நடக்கும்.

கணியான் ஆடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தினர் இன்றும் இந்த இனிய கலையை அழகிய முறையில் காத்துக்கொண்டு வருகின்றனர். குலத்தொழிலாக இதைச் செய்கின்றனர். கணியார் என்றே இவர்கள் தங்களை அழைக்கின்றனர். சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்ட