உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

உள்ளப் போக்காகக் காணப்படுகிறது. சமூகத்தால் புறத்தடை களைத்தான் விதிக்க முடியுமே தவிர அகவுணர்வுகளைக் கட்டுப் படுத்த இயலாது. அவை இயற்கையான இயல்புகளை உடையவை. இதனைச் சுவையாகக் காட்டிக் குறவஞ்சி நாடகம் சிறந்துள்ளது.

ஓர் இளம் வயதினள் தன் பருவ மலர்ச்சிக்கு உரிய உணர்ச்சித் தாக்குதலால் தலைவன் மீது காதலுற்றுக் கலங்கு கி றாள். இத்தகைய மயக்கமும் தயக்கமும் அனைவருக்கும் பொதுவானவை என்பது இந்த நாடகத்தின் வாயிலாக மக்களுக்கு நயமாக விளக்கப்படுகிறது. காதலின் பிடியில் சிக்கிய மங்கை செயலற்று மஞ்சத்தில் சோர்வுடன் புரண்டு தவிக்கிறாள். தோழியின் ஆறுதலுரை அவளிடம் பாலைவன மழையாகப் பயனற்றுப் பொழிகிறது. தோழி தலைவனிடம் தூதாகப் போக ஒப்புக்கொள்கிறாள்.

குறமகள் வருகை அடுத்த காட்சியாக வருகிறது. குறுகுறுத்த

அவளது

விழிகளும் விறுவிறுப்பான மொழிகளும் தலைவியைக் கவர்கின்றன. குறமங்கை கோலெடுக்கிறாள். காதல் நங்கை கைவிரிக்கிறாள். கைரேகை பார்த்துக் கருத்துடன் குறிசொல்லும் குறமகள் நல்லது நடப்பதை நன்குணர்ந்து கூறுகிறாள். தலைவி நாணத்தால் தளைகவிழ நகை காட்டி மகிழ்கிறாள். அலைந்து வாழும் குறமகளின் உரையால் நிலைத்து வாழும் தலைவி மனம் மகிழ்ந்து பரிசுகள் அள்ளிக் குவித்து அருமையாக அவளை வழியனுப்புகிறாள். புதிராகத் தோன்றும் எதிர்காலம் இனிமையாக அமையும் என்ற குறிப்பினை அறியும் போது மனிதமனம் எவ்வாறு மகிழ்ந்து நெகிழ்கிறது என்பதற்குத் தலைவியின் தாராளத் தன்மை நல்ல சான்றாக விளங்குகிறது.

குறமகளைப் பிரிந்து வருந்தும் குறவன் அவளைத் தேடி. யலைகிறான். வேட்டைக் காட்சியின் பாட்டைக் கேட்கும் வாய்ப்பு இந்த இடத்தில் மக்களுக்குக் கிடைக்கிறது. குறமகள் பலவிதமான பரிசுகளுடன் நகைமுகங் காட்டி குறவன் முன் வருகிறாள். வியப்புடன் வினவும் குறவனுக்கு இன்பக் களிப்புடன் குறமகள் விடைகளை, நயமாகக் கூறி நகைக்கிறாள். இருவரும் இணைந்து தங்கள் வாழ்விடம் நோக்கி விரை கின்றனர். அனைவருக்கும் நல்வாழ்வு காட்டிய குறவஞ்சி நாடகம் வாழ்த்துடன் நல்ல முடிவையடைகிறது.