160
ளுவ நாடகம்
குளுவ நாடகம் இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாட்டுப்புறக் கலையமைப்பில் நடத்தப்பெற்ற ஒருவகை நாடக இனமாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் சிறப்பாக நடிக்கப்பெற்றுள்ளது. பல குளுவ நாடகப் பாடல் களை இன்றும் சிலர் வாய்மொழியாகப் பாடி மகிழ்வதைப் பார்த்தால் முன்பு அவற்றிற்கு நல்ல மதிப்பு இருந்துள்ளதாகத் தெரிகிறது.
பறவை வேட்டையாடும் மலைவாழ் குளுவரின் ெ தாழிலை விளக்கிக் காட்டுவது குளுவநாடகம். ஒரு மானிடத் தலைவனையோ அல்லது இறைவனையோ புகழ்ந்து பாடும் குறிப்புக்களுடன் நாடகப் பாடல்கள் புனையப்படும். இத்தகைய நாடகங்களைக் குறுநில மன்னர் அல்லது வள்ளல் முன்பு நடித்துக்காட்டிப் பரிசு பெறுவர். விழாக்களின்போது நடித்து மக்களை மகிழ்விப்பதும் உண்டு. குளுவன், சிங்கி, சிங்கன் ஆகிய மூன்று பாத்திரங்களைக் கொண்ட மிகச் சிறிய நாடகமாகவே இது காணப்படுகிறது. இதை நடத்துவது மிகவும் எளிது. பாட்டும் நடிப்பும் சுவையுடன் அமைவது.
குளுவ நாடகத்தில் இறை வாழ்த்தும் அவையோர் பணிதலும் விரிவாகக் காணப்படுகிறது. கொடை வழங்கும் வள்ளலை ஓர் அகவல் பாட்டால் நெடுநேரம் பாடிப்புகழ்வது வழக்கம். பின்னர் வேடப் புனைவுடன் பறவை வேட்டையாடும் கண்ணி, சுண்டு வில் முதலிய கருவிகளுடன் அவைமுன் தோன்றித் தன்னை அறிமுகப் படுத்தும் பாடலைப் பாடி ஆடுவான். அவனைத் தொடர்ந்து சிங்கன் வந்து பாடியாடுவான். இருவரும் தங்களுடைய சித்து வேலைகள் மருத்துவத் திறமைகள் பற்றி விளக்கிப் பாடுவர். நீர்நிலைகள் நிறைந்த வயல் வெளிப் பரப்புக்கு வருகிறார்கள். பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து வருகின்றன. அவற்றில் ஒலிகள் பலவகையாகக் கேட் கின்றன. அவற்றைப் பிடிக்கும் முயற்சிகளைக் குளுவனும் சிங்கனும் செய்கிறார்கள்.
வலை விரிக்கப்படுகின்றன. கண்ணிகள் ஊன்றப்படு கின்றன. அவற்றில் இரையைத் தூவி இருவரும் பதுங்கி நிற்கின்றனர். பறவைகள் பலவாறு பறந்து வலையில் சிக்கிக் கொள்கின்றன. அவற்றை வகை பிரித்து தொகையெண்ணிச் சேர்த்துக் காட்டுகிறார்கள். காவடியில் தூக்கிச் சுமக்கிறார்கள்.