163
சிறப்பு கொடுத்துள்ளன. உச்சக் குரலில் இனிய பண்ணின் இயல் பாகப் பாடும் பாடகர்களே நாடக மேடைமேறி நடிக்க முடியும். 'இரவல் குரல்' என்றே பேச்சுக்கே அங்கு இடமில்லை. பீடுயர் தோற்றப் பொலிவுடையவர்கள் நடிப்பதையே மக்கள் விரும்பினர் பெரும்பாலும் எல்லா நாடகங்களிலும் அரசனும் அரசியும் முக்கிய பாத்திரங்களாக வருவர் ஆகையினால் நாடகத் தலைவனையும் தலைவியையும் முறையே 'அயன் ராஜபார்ட், அயன் ஸ்திரிபார்ட்' என்று காரணம் சிறக்க அழைத்தனர். மிகுதியாது பாடலும் மிகையான நடிப்பும் அவர்களுடைய தாகவே இருக்கும். நகையும் அழுகையும் ஆரவாரமாகத் தோன்றும். சிரிப்பு மூட்டுவதற்காகத் தனியான பாத்திரங் களும் கதையுடன் இணைந்தும் இணையாதும் பல துணை நிகழ்ச்சிகளும் இடையில் நுழைக்கப்படும்.
பெரும்பாலும்
புராணக்கதைகளே நடிக்கப்படும். ஆகையினால் கதை அனைவருக்கும் நன்றாகத் தெரிந்ததாகவே இருக்கும். அதை எப்படி நடித்தாலும் மக்கள் புரிந்து கொள்வர் உரக்கப் பாடுவதிலும் சிறக்க நடிப்பதிலும் தான் நாடகத்தின் வெற்றி அமைந்திருக்கும். ஒரு ஊரில் நாடகம் நடக்கும் என்றால் பல ஊர் மக்கள் அங்கு வந்து கூடுவர். பல கல் தொலைவை கால் நடையாகக் கடப்பதற்கு அவர்கள் தயங்கு வதே இல்லை. நாடகம் நடப்பதற்குப் பல மணி நேரத்துக்கு முன்பே அங்கு வந்து கூடுவர். பாயுடன் வந்து அமர்வதும் வழக்கம். பெரும்பா லும் இரவு பத்து மணிக்கு மேல்தான் தொடங்கும். பின் விடியவிடிய நடக்கும். மக்கள் தூங்காது இருக்க பல விதமான பொருட்களைக் கொண்டு வருவர் அவற்றில் முக்கியமானவை சீடைமுறுக்கு, கடலை; வெற்றிலை பாக்கு, பீடி முதலியன தூக்கம் வராமலிருக்கக் கண்ணில் வெங்காயத்தைப் பிழிந்து தடவிக் கொள்வதும் உண்டெனக் கூறுவர்.
நாடகம்
நாட்டார் நாடகங்கள் தெருக் கூத்தாக நடைபெறுவதை ஆந்திர நாட்டு வீதி நாடகங்களுடன் ஒப்பிடலாம். கலை நுட்பம் குறைந்து காணப்பட்டாலும் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதில் குறைவுபடுவதில்லை. தெருக்கூத்தில் நடிகர் திரையை விலக்கிக்கொண்டு மக்களின் முன் தோன்றி தன்னை இன்ன பாத்திரம் என்று அறிமுகப்படுத்திப் பாடுவர். பின் பலவாறு நடித்து ஆடுவார். கட்டியங்காரன் சிறிது வேடிக்கையாக அரங்கத்தில் தோன்றுவான். திரைக்குப் பின்னாலிருந்து ஆடித் தன் முகத்தைக் காட்டுவதும் மறைப்பதுமாகச் சிறிது காலம்