உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




165

அழாத பெண்களே இருந்திருக்க. மாட்டார்கள். இதிலிருந்து நாடகக் காட்சிகளை உண்மையான உணர்வுடன் சுவைக்கும் கலைத்தன்மை நாட்டுப்புற மக்களுக்கு இருந்துள்ளதை அறியலாம்.

ஒருநாள் நாடகங்களில் தொடக்க

பாத்திரங்கள்

பொதுவாகத்

இராணியாக நடிப்பவர் சரிகை யுடன் தைத்த பட்டுப் புடவையும் மற்றவர்கள் நூல் புடவையும் கட்டியிருப்பர். ஜிகினா, நாகத்தகடு, பாசிப்பவளம் ஆகிய வற்றால் அணிகளைச் செய்திருப்பர். மேலிடப் பெண் பாத்திரங்கள் முன்கொசுவம் வைத்து ஆடை கட்டுவர். இதற்குப் பாப்பாரக் கட்டு' என்று பெயர். கூறுவர். கொண்டையில் பூ வைத்து *பிச்சோடா' முடிப்பு போட்டிருப்பர். இதை 'வாழைப்பூ கொண்டை' என்றும் கூறுவர். ஏவல் பெண் பாத்திரங்கள் சந்துக் கொசுவம் வைத்துச் சேலை கட்டியிருப்பர். இதற்குச் "சும்மாக் கட்டு' என்று பெயர். தலைமுடியை வாரி அள்ளிக் கட்டியிருப்பர். இத்தகைய வேறுபாடுகளினால் பாத்திர ஏற்றத் தாழ்வை மக்கள் கண்டு உணர்வர்.

களையே இருப்பர், அரே விதமான ஆடை அணி

இராசபார்ட் நடிகர் சரிகையுடைய நீண்ட மேலாடை, அட்டையில் செய்யப்பட்ட கிரீடம் மேலாக வளைந்துள்ள செருப்பு, சரிகை வேட்டி ஆகியவற்றை அணிந்து விளக்கமுடன் தோன்றுவர். மற்றவர்கள் சரிகை குறைந்த ஆடைகளையும், நகைச்சுவை பாத்திரம் வேடிக்கையான பலவண்ண ஆடைகளை யும் குஞ்சமுடைய தொப்பியையும் அணிந்து வருவார்கள். பாத்திரத் தகுதிகளை ஆடையணிகளினால் அறிய இத்தகைய மாற்றங்கள் உதவுகின்றன.

தென் ஆர்க்காடு மாவட்டத்தில் வட பாங்கு தென்பாங்கு என இருவிதமாகத் தெருக்கூத்து நடத்தப்படுகிறது. இவற்றைத் தெற்கத்தி,வடக்கத்தி நாடகங்கள் என்றும் கூறுவர். இவற்றைச் ஸ்ரீலங்காவிலுள்ள மட்டக்கிளப்பில் நடைபெறும் வடமோடி, தென்மோடி ஆகிய நாட்டுக் கூத்துக்களுடன் ஒப்பிட்டுக்

காணலாம்.

தென் ஆர்க்காட்டிலுள்ள தெற்கத்தி நாடகங்கள் இராமாயணக் கதைகளை மிகுதியாகக் கொண்டவை. அரிச்சந்திரன் போன்றவையும் நடக்கும். வடக்கத்தி நாடகங்கள் பாரதக் கதைகளை அதிகமாகக் கொண்டவை. புராணக் கதை கள் மிகக் குறைவாகவே நடக்கும்.