11
புறக் கலைகள் நாகரிகத்தின் அழுத்தத்திலும் அமுக்கத்திலும் சிதையாது மறையாது இன்றும் சுவையுடன் சிறப்பாகச் சிற்றூர் களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
நாட்டுப் புறக் கலைகளின் இன்றைய நிலை
சமய
சுவை மிக்க நாட்டுப்புறக் கலைகளை இன்றும் நாட்டுப்புற மக்கள் உயிரூட்டி வளர்த்து வருவதைக் காணலாம். இக்கலை களுடன் இறைத்தொடர்பான புனிதத் தன்மை ஒட்டி இருப்பதி னால் மக்களால் அவற்றைப் புறக்கணிக்க முடியவில்லை. நம்பிக்கையில் உறுதியடைய நாட்டுப்புற மக்கள் இவற்றைச் சமயச் சடங்காகக் கருதி வழிபாட்டுடன் ஒட்டுறவாடச் செய்து மகிழ்கின்றனர். நெல்லை, குமரி மாவட்டங்களில் வில்லுப் பாட்டு நடைபெறாது அம்மன் கொடை விழாக்கள் முழுமை யடையாது. என்ற நம்பிக்கையே உள்ளது. இசக்கியம்மன், சுடலைமாடன் கொடைகளில் கணியான் ஆட்டுக் கட்டாய நிகழ்ச்சியாக அமைகிறது. குறிப்பிட்ட தெய்வங்களுக்குக் குறிப்பிட்ட கலைகள் நடத்தப் பெறவேண்டும் என்ற வழக்க முறை இருப்பதினால் கலைநிகழ்ச்சி தவிர்க்க முடியாத விழா நடவடிக்கையாக அமைந்துவிட்டது நாகரிகத்தால் மக்களின் நம்பிக்கைகளைக் கட்டுப்படுத்தவோ தகர்த்து எறியவோ இயலாது என்பதற்கு இப்பழக்கம் நல்ல சான்றாக உள்ளது. இறையிடம் வேண்டுதலுகுக் கடனாகவும் சிலகலைகள் நடத்தப் பெறுகின்றன. குழந்தைப்பேறு வேண்டி மீனாக்ஷி கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி திருமணம் முதலிய கூத்துக்களையும் மழை பெய்வதற்காக விராடபருவம் நாடகத்தையும் மக்கள் தெய்வத்திடம் வேண்டுதலாக நடத்துவதை இன்றும் பல இடங்
களில் காணலாம்
நம்பிக்கை அடிப்படையில் மாத்திரமல்லாது சுவைத்து மகிழும் நோக்கத்துக்காகவும் நாட்டுப்புறக் கலைகள் மக்களால் நடத்தப்படுகின்றன. மக்களை எளிய முறையில் இனிமையாகக் கவரும் ஆற்றல் நாட்டுப்புற கலைகளுக்கு இருக்கிறது இவற்றைச் சுவைத்து மகிழ நுட்ப அறிவு தேவைஇல்லை. நாட்டுப்புறக் கலைகள் மக்களின் இயல்பான உணர்வைப் புலப் படுத்தும் தன்மையுடன் அமைவதால் அவற்றில் சுவையும் இன்பமும் எளிதாகப் பெற மக்களால் முடிகிறது. இனியதை எளிதாகத் தரும் அருமையான நாட்டுப் புறக்கலைகளை மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை வியப்புடன் காத்து வருவதில் வியப்பில்லை.