13
வாழ்வுப்பேறாக அதனைக் கருதி உழைக்கின்றனர். தமிழகப் பல்கலைக் கழகங்கள் நாட்டுப்புறவியல் ஆய்வுக்குச் சிறப்பான இடம் கொடுத்துள்ளன. பல கல்லூரிகள் நாட்டுப்புறவியலை விருப்ப பாடமாக ஏற்றுள்ளன.. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறு வனம் இத்தகைய ஆராய்ச்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து சிறக் கிறது. பேசும் படக் கலை மூலமும் நாட்டுப்புறக் கலை வளர்ச் சிக்கு நல்ல ஆதரவு உள்ளது. சில காட்சிகளில் இத்தகைய கலை களுக்கு இடம் ஒதுக்கி இனிமையான முறையில் நாட்டுப்புறக் கலைகளின் பெருமைகளை உலகுக்கு அறிவிக்கப்பட இயக்கு நர்கள் முன் வந்துள்ளனர். பத்திரிகை உலகும் நாட்டுப்புறக் கலைகளை ஊக்கும் பணியை உயர்வாகச் செய்து வருகிறது. அரசு இதழான 'தமிழரசின்' பணி இந்நிலையில் குறிப்பிட்டுக் கூறத் தக்கதாகும்.. இவற்றைக்காணின் ஓர் உண்மை புலனாகும் நாட்டுப்புறக் கலைகளில் உண்மையான கலைத்தன்மையும் பயனும் இருப்பதை இன்றைய உலகம் ஒப்புக் கொள்கிறது.
நாட்டுப்புறக் கலைகளின் நோக்கம்
(தமிழ்நா
நாடு பலவகையான நாட்டுப்புறக் கலைகளின் அருங் காட்சியகமாகவே உள்ளது. விதம் விதமான கலைகள் இடத் துக்கு இடம் தோன்றி நாட்டைக் கலைக்கோலமாக மாற்றி யுள்ளன. அவை மக்களின் பண்பாட்டுக் கொள்கலமாக விளங்கு வதால் மானிடவியலாருக்கு ஆய்வுக்கூடமாக உதவுகின்றன. மக்களின் சமயவுணர்வு, சமுதாய் வாழ்வு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், உறவு முறைகள், உணர்ச்சிக் கூறுகள்,ஆகிய வற்றைச் சிறப்பாக விலக்கும் தன்மைகள் நாட்டுப்புறக் கலை களில் நிறைந்துள்ளன. மனிதனின் அச்சமும் அதைத் தீர்க்கும் வரையிலும் கலைகளில் காணக்கிடைக்கும் செய்திகளாகும். பல வித பரந்த முறைகளைப் பின்பற்றி பலவிதமான கலைகளை மனிதன் ஏன் அரங்கேற்றியுள்ளான் என்பதையும் அறிதல் வேண்டும். கதையரங்கேற்ற முறைகளும் ஆய்வுக்கு உட் பட்டால் அரிய உண்மைகள் தோன்றும் பல விதமான பண் பாட்டுக் கலப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மனித வாழ்வை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதையும் காணவேண்டும். கலைகளின் வளர்ச்சி வரலாற்றை அறிந்து அதன் பயனாக ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றங்களை நுட்பமாகப் புலப் படுத்துவதும் ஆய்வுக்குப் பயனாக அமையும். கலைகளின் வாயிலாக மனிதனின் அறிவுப் பரப்பையும் அளவிட்டுக் காண முயலலாம். ஒருமித்த எண்ணத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து