22
கின்றனர். இவற்றை மனித வாழ்க்கைப் பருவக் கலைகள் என்று கூறலாம். வாழ்க்கை இயங்க ஆதாரமாக அமைவது தொழில். மனிதனுடைய தேவைகளை. உணவு, உடை, உறையூள் ஆகியவற்றைப் பெற அவன் தொழில் செய்ய வேண்டும். தான் செய்யும் தொழிலின் பயனை மிக மகிழ்ச்சியாக ஏற்று மனிதன் கொண்டாடுவதை எங்கும் காணலாம். தகைய கொண்டாட்டங்களில் பலவிதமான கலைகள் நடத்தப் படுகின் றன. அவை தொழில்களுடன் தொடர்புடையனவாக அமைகின்றன. அவற்றைத் தொழிற்கலைகள் என்று கூறலாம்.
அத்
போரியல்புடைய மனிதன் தன் ஆற்றலைக் காட்ட விரும்புவது இயற்கை. பெரும்பாலும் உடலாற்றலை நம்பியே மனிதன் வாழ்ந்து வந்துள்ளான். ஆனால் காலப்போக்கில் தன் நுட்ப அறிவினால் பலவிதமான போர்க் கருவிகளைக் கண்டு பிடித்துள்ளான். அவற்றை முறையாக இயக்கும் பயிற்சியைப் பெறுகிறான். அத்தகைய பயிற்சியைத் தொடர்பு படுத்தியும் சில கலைகள் உருவாகியுள்ளன. உடல் வலிமையுடன் கருவி களைத் திறமையுடன் கையாளும் பயிற்சியும் இணைந்து சில கலைகள் உருப்பெற்றுள்ளன. அவை போராடும் இயல்பு குன்றியவர்களுக்கு மன நிறைவையும் வியப்பையும் தருவனவாக உள்ளன. அவற்றைக் காணும்போது மக்கள் ஊக்கமும் உணர்வும் பெற்று மகிழ்ந்தனர். வீரக் கலைகளை வாழ்த்தி வரவேற்றனர். இத்தகைய கலைகளைப் போரியல்புக் கலைகள் என அழைப்பதே முறையாகும்.
சமூகத்தைச் சீர்செய்து பெருமையடையச் செய்வதை மனிதன் மிகவும் விரும்புகிறான். தான் இணைந்துள்ள சமூகம் உயர்வுடன் அமைய வேண்டும் என்று நினைக்கிறான் தனி மனித இயல்புகள் பல வித வேறுபாடுகளுடன் காணப்படு கின்றன. இத்தகைய வேறுபாடுகளை ஒதுக்கி சமூக அமைப்பு முறைகளுக்கு அனைவரும் அடங்கவேண்டும். சமூக ஒற்றுமை இறுக்கமாக அமைத்தால்தான் மனிதன் வாழ்வில் உயர்ந்து சிறக்க முடியும். நல்லது என்று பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டவற்றை அனைவரும் கடைப் பிடிக்க வேண்டும். இல்லை யாயின் சிக்கல்களும் சீர்கேடுகளும் முளைத்து சமூகத்தைச் சீரழியச் செய்து விடும். ஆகையினால் சமூகச் சீர்த்திருத்தத்தை மனிதன் மிக முக்கியமாகக் கருதி அதற்காகப் பலவழிகளில் முயல் கிறான். கலைகளும் சீர்திருத்தப் பணிக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. பல்வேறு விதமான கலைகள் நடைபெறும்போது அவற்றுடன் இடைநுழைப்பாகச் சமூக சீர்திருத்த உணர்வு