உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




31

தாசிகள் நோன்பும் ஒரு கலை நிகழ்ச்சியாகத் தஞ்சாவூரில் நடைபெறுகிறது. அட்டகோடி விழாவின் போது தாசிகள் ஒன்று கூடி குறவஞ்சி நாடகங்களை ஒரு நோன்பாகக் கருதி நடிப்பர். இன்றைய நிலையில் அந்தக் கலை நிகழ்ச்சிகள் நாட்டுப்புறக் கலைப்பண்புகள் மாறித் திருந்திய முறையில் நடத்தப் பெறுகின்றன.

குறி சொல்லல்

குறி சொல்லும் நிலையிலும் பல கலைகள் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன. இறையுணர்வைப் பின்பற்றியே குறி சொல்லப்படுவதினால் சமயச் சார்புடன் இந்தக் கலைகள் இணைக்கப்படுகின்றன.. தெய்வமேற்று ஆடுகிறவர்கள் பலர் பின்வருவது முன்னுரைக்கும் திறம் பெற்றுள்ளதைக் காணலாம். சரியாகவும் தவறாகவும் குறிகள் அமையினும் நாட்டுப்புற மக்கள் அவர்களை நாடிச் செய்கின்றனர்.

குடுகுடுப்பைக்காரர் பெற்றுச்

பொருள்

வீடு வீடாக வந்து குறி சொல்லி செல்வதை ஊர்களில்

இன்றும்

பல

காணலாம். சிலர் பாடியும் ஆடியும் குறி சொல்வது கலையுணர் வுடன் அமையும். இராப்பாட்டாளிகள் என்ற ஒரு கூட்டத்தில் இரவில் வீட்டுக்கு வீடு சென்று குறி சொல்லிப் பாடுவர். அடுத்த நாள் காலையில் பணமோ பொருளோ பெற்றுச் செல்வர். இவர்கள் பெரும்பாலும் குறிப்பு அறிவதில் திறமையுடையவர் களாகக் காணப்படுவர். சோதிடம், சித்து வேலைகள் தெரிந் திருப்பர். இவர்களைச் சில இடங்களில் 'கோணங்கிகள்' என்று மக்கள் கூறுகிறார்கள். பழங்குடிகளைச் சேர்ந்தவர்களாத்

தோன்றுகிறார்கள்.

வகைப் பாட்டின் தொகுப்பு

நாட்டுப்புறக் கலைகளைச் சமூகச் சார்புக் கலைகளாகவும் பிரித்துக் காண்பது மிகப் பொருத்தமாகவும் உள்ளது. அவை தனித்தனியே பல பிரிவுகளுக்கு உட்படுவதைக் காணலாம். இத்தகைய பிரிவுகளில் அடங்கும் தமிழர் நாட்டுப்புறக் கலைகளைத் தனித்தனியாகவும் விளக்கமாகவும் அறிய வேண்டியது தேவை. சில கலைகள் அழிவுறும் நிலையில் உள்ளன. ஆனால் பல கலைகள் சீரும் சிறப்புமாக இன்றும் கொண்டு நாட்டுப்புற மக்களின் இனிய ஆதரவில் வளர்ந்து வருகின்றன. அவற்றை இப்பாகுபாட்டுள் அடக்கி விளக்கமாகக் காணலாம்.