உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




39

  • மதனி கல்யாணம் மணவோல வாழ்த்தலுக்கு சிவனே குருவான திருமேனி முன்னடவா அய்யா நாரணரும் அம்மை உமையவளும்

தெய்வார் மனமிரங்கி திருமுகூர்த்தம் செய்யவே அண்டரோடு தேவரும் அறியவே ஓலையிட்டு கொண்டாடி இன்பம் குளிர்ந்தநதிபாய்து போல் இவனிவளாம் என்றுசொல்லி இனங்குறித்துப் பெண்பேசி கட்டுடைய பந்தலுக்குக் காலது நாட்டி அவனி அறியவே அலங்காரம் இட்டனரே! அனைவரும் கூடிடவே அங்கெல்லாம் இன்பமதே. பட்டுக்குமேல் பட்டுடுத்திப் பந்தலிலே தானிருத்தி மாப்பிள்ளையும் பெண்ணையும் மணவறையில் தானிருத்தி தம்புராவும் கின்னரமும் வாசித்து நின்றிடவே நடனசாலை தனைவருத்தி நாட்டியமும் ஆடிநிற்க கலியாணப் பந்தலிலே கச்சேரியும் நடத்திடவே

அழகு கொலுவிருக்க ஆனந்தம் கொஞ்சிநிற்க அரகரா என்றுசொல்லி அம்மையுமை தானெழுத்து சிவசிவா என்று சொல்லி திருச்சரடு சாத்தினரே!

இப்பாடலில் மணம்பேசி, திருமணப் பந்தலிட்டு, மணமக்களை ஒப்பனை செய்து மணமேடையேற்றி மக்கள் முன்னிலையில் ஆடலும் பாடலும் இன்ப முழக்கம் செய்ய அனைவருடைய வாழ்த்துடன் மணமக்கள் திருநாண் பூட்டி வாழ்க்கையில் இணைந்த இன்ப நிகழ்ச்சி இசையுடன் விளக்கப்படுகிறது. இசை நிகழ்ச்சியும் நடனக் காட்சியும் கண்ணுக்கும் காதுக்கும் இன்பம் தருவது இயல்பாக விளக்கப்படுகிறது.

சீர்வரிசைகளைச் சிறப்பாகக் கொடுப்பதையும் பாடல் மூலம் குறிப்பிடுகின்றனர். தாய் மாமனுக்குத் திருமண விழாவில் சிறப்பிடம் கொடுக்கப்படுகிறது. எல்லாவிதமான சிறப்புகளும் செய்து மணமக்களை வாழ்த்துகின்றனர்.

'காயாம்பு மேனியர்க்குக் கட்டிலொன்று தான்போட்டு தாயோடு தான்பிறந்த தாய்மாமன் தனையிருத்தி

கோப்புக் குண்டான குருவரிசை தான்கொடுத்து

சீதனங்களான சீர்வருசை சிறப்பாகக் கொடுத்தாரே. ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி

பால்போல் பொங்கிப் பதினாறும் தான்பெற்று வாழ்வீர் வாழ்ந்திடுவீர் வையகத்தோர் தான்புகழ வாழ்க

ழ்க வாழ்கவென்று வாழ்த்தினோம் நாங்களுமே!