உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




59

இருக்கும். தப்பு மேளம் கொட்டப்படும். அதன் தாளத்துக்குத் தக்கவாறு அவர் தெருவில் நின்று ஆடுவார். பல சமயம் புலி போன்று உறுமிக் கொண்டு அங்கும் இங்கும் பாய்வதும் சாடுவதும் அச்சவுணர்வை ஏற்படுத்தும். இருப்பினும் இன்பக் கலையாகப் புலி வேடத்தை மக்கள் காண்பதால் துணிவுடன் பக்கத்தில் நின்று களிப்படைவர். சிறுவர்களை மிகுதியாகக் கவரும் ஆட்டமாக இது உள்ளது. வீடுகளிலும் கடைகளிலும் இவர்களுக்குத் துணிமணிகள், பணம் காசுகள் கொடுக்கப்படும்.

கடுவாய் ஆட்டம்

கடுவாய் ஆட்டமும் புலிவேடம் போன்ற ஆட்டமாகவே அமைந்துள்ளது. கடுவாயின் முகம் போன்று போலி முகம் கட்டிக் கொள்வர்.உடம்பு முழுவதும் விரிவிரியாக வண்ணக் கலவையால் வரிகள் வரைந்து தனக்குக் கடுவாயின் தோற்றம் கொடுப்பர். மகுடம் அல்லது தப்புக்கொட்டு மேளம் ஒலிக்கப் படும். இடையிடையே அலறியும் உறுமியும் ஆட்டத்துக்கு விறு விறுப்பு மூட்டுவர். வேகம் மிக்க கடுமையான ஆடலாக இது தோன்றும். இவ்வகை ஆடல் பெரும்பாலும் தென்மாவட்டங் களில் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட காலத்தில் நடை பெறும். சில சமயம் கடுவாய் ஆடுபவர் ஒரு உயிருள்ள ஆட்டைக் கடித்துக் கைகளில் தூக்கி முறித்து எறிவதையும் காணலாம். கைநகங்களில் கூர்மையான கடுவாய் நகங்களைப் பொருத்திக் கட்டியும் ஆடுவது உண்டு.பிரியாக முறுகிய ஆட்டுக் கொம்புகளைக் கையில் பிடித்து அங்கும் இங்கும் துள்ளி அடவுமுறையில் ஆடுவது கடுவாயின் பதுங்கிப் பாயும் தன்மை யைப் புலப் படுத்தும் கடுவாய் இவ்வாறு ஆடும் போது இன்னொருவர் ஒரு வெடியுடன் பாய்ந்து அதைச் சுட முயல்வது போன்று நடிப்பார். காடுவாய் வெடியிலிருந்து தப்பவும் வெடிக் காரனைத் தாக்கவும் முயல்வதாக ஆட்டம் நடை பெறும். இதனை மிகமிக உன்னிப்பாகக் கூடி நிற்போர் ஆவலுடன் கண்டு களிப்பர். கடுவாய்க்கும் வெடிக்காரருக்கும் நடக்கும் வெற்றி தோல்வி போட்டியாகவே அந்த ஆட்டம் நடக்கும்

வீடுகளுக்கு முன்னாலும் கடைகளுக்கு முன்னா லும் நின்று நின்று ஆட்டம் நடக்கும் மக்கள் அவர்களைச் சூழ்ந்து நிற்பர். அவர்களுக்கு துணிகளும், பணமும், தேங்காயும் கொடுக்கப்படும். சில சமயம் வசதியுள்ளோர் விலைவுயர்ந்த பரிசுப் பொருட் களைக் கொடுப்பதும் உண்டு. பெற்ற பொருட்களை ஒரு கம்பில் கட்டித் தொங்க விட்டு அதனைத் தூக்கிப் பிடித்தவாறு