உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

பங்கு

ஆடுவதாலும் அதில் கோமாளியின் சிறப்புடையதாக இருப்பதாலும் இந்த ஆடலை உறுமிக் கோமாளி ஆட்டம் என்று கூறுகின்றனர் இவர்கள் இரண்டு புல்லாங்குழல்கள், தப்பு, உறுமிமேளம், இரு கம்புகளால் அடித்து முழக்கப் படும் ஒரு முகப் பேரிகை ஆகிய இசைக் கருவிகளையும் துணையாகப் பயன் படுத்துவது உண்டு.

முதன் முதலில் கோமாளி தோன்றி அறிமுகமாக 'கோமாளி தாசரி ஒச்சேனையா' என்று பாடியவாறு வருவான் பின்னர் 'விஷ்ணு பக்தனான கோமாளி நான் இதோ வந்து விட்டேன்' என்று கூறுவான். ஆட்டம் தொடங்கி விடும். இந்தக் குழுவினர் அழகாக ஒப்பனை செய்து இரண்டு காளைகளையும் கொண்டு வருவர். காளைகளில் வண்ணத் துணிகள் போடப்பட்டிருக்கும். அவர்களுடைய பாடல் பெரும்பாலும் வாழ்த்தும் பாராட்டு மாகத்தான் இருக்கும் மக்களின் நலம் வேண்டும் பாடல்களாகவும் பாடப்படும் இதற்குச் சமயச் சிறப்பை விடவும் சமூகவுணர்வுச் சிறப்பே அதிகமாக உள்ளது. உறுமிக் கோமாளி ஆட்டத்தினர் வீடுகளுக்குச் சென்று பரிசுகள் பெறுவர். இந்தக் கலை ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, செங்கல்பட்டு, திருச்சி; சேலம் மாவட்டங்களில் மிகுதியாக நடைபெறுகிறது.

றவன் குறத்தி நடனம்

வட

குறவர் குல மக்கள் முற்காலத்திலிருந்தே நாட்டுப் புற மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்களுடைய குறி சொல்லும் பழக்கம் காரணமாக இருக்கலாம். அவர்களைக் கொண்டு தமிழ் நாட்டில் பல கலைகள் உருவாகி இருக்கின்றன. திருச்சி. தஞ்சை, பெரியார், தர்மபுரி மாவட்டங்களில் குறவன் குறத்தி நடனம் மிகப் பரவலாக நடை பெறுகிறது. இது மிகவும் எளிமையான ஆடலாகும். இவர்கள் பச்சை குத்திக் குறி சொல்வது போல் நடிப்பர். இருவர் குறவன் குறத்தி வேடமிட்டு வருவர். பலவிதமான குறத்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு வீட்டுக்கு வீடு வருவது இவர்களது பழக்கம். மக்களையும் ஊர்த் தலைவரையும் வாழ்த்துவர் நாட்டாண்மைக் காரரின் புகழைப் பாடுவர். வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்ட கலையாகவே உள்ளது. விழாக் காலங்களில் இத்தகைய ஆடலை மக்கள் நடத்திக் காண்பதும் உண்டு.

வீரக் கலைகள்

மனிதன் தன்னைப் பகைவரிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டிய நிலையுடையவன். உடல் வலிமை, அறிவுக் கூர்மை, ஆயுதத்துணை ஆகியவற்றால் தன் போராற்றலைக் காட்டித்