அரசு
வறுமை நிலைக்கே தள்ளப்படு கின்றனர். இதனால் நாட்டுப்புறக் கலைஞர்களுக்குப் பல்வேறு சலுகைகளைச் செய்து வருகின்றது. எனவே, நாம், நம்முடைய பழம் பெருமையை மீண்டும் நிலைநிறுத்தவும், மற்றவர்களுக்கு எடுத்துக்கூறவும் இக்கலைகளுக்கும், இக் கலைஞர்களுக்கும் ஆதரவு நல்க வேண்டிய நிலையில் இன்று உள்ளோம்.
தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாக்கும் நிலையிலும், அவற்றைப் போற்றும் நிலையிலும் தன்னுடைய நோக்கங்களை அமைத்துக்கொண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இந்நூலின் தேவை கருதி, இதனை மறுபதிப்பாக வெளியிட முன்வந்தது. இதற்கு இசைவு அளித்த பதிப்புக் குழுவினர்க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு கல்வியமைச்சர் திருமிகு செ. செம்மலை அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி பண்பாடு-மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர் திருமிகு பு.ஏ. இராமையா, இ.ஆ.ப., அவர்களுக்கும், சிறப்புச் செயலாளர் திருமிகு தா. சந்திரசேகரன் இ.ஆ.ப., அவர்களுக்கும் என் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.
இந்நூலினை அழகுற அச்சிட்டுத்தந்த யுனைடெட் பைண்டிங் கிராபிக்ஸ் அச்சகத்தார்க்கு நன்றி.
சென்னை நாள்: 31-10-03
இயக்குநர்