64
சிலம்பாட்டம்
ஆயுதங்களைக் கொண்டும் பலவிதமான வீரப் போட்டிகள் நடந்துள்ளன. கம்பு, வாள், ஈட்டி, கத்தி, கதை ஆகியவற்றைக் கொண்டு வீர விளையாட்டுகள் நடத்துவதை இன்றும் பல இடங்களில் காணலாம். வீர முறுக்குடைய மக்களே இத்தகைய வீர ஆடல்களை விரும்பிக் காண்பர். தமிழர்களுடைய நாட்டுப் புறக்கலைகளும் மிகச் சிறப்பாக விளங்கும் 'சிலம்பம்' ஒரு முக்கியமான வீர விளையாட்டாகக் காணப்படுகிறது. நாட்டில் பல பகுதிகளில் பரந்து காணப்படும் சிலம்பக்கலை தமிழ் மக்களின் வீர முனைப்பைச் செவ்வனே விளக்கிக் காட்டுகிறது. தமிழ் நாட்டின் தென் பகுதியில் கலைத் திறனுடன் வளர்ந்து சிறந்துள்ளது.
அது
'சிலம்பு' என்பது பலபொருள் ஒரு சொல்லாக உள்ளது. 'ஒலித்தல்' என்ற பொருளைச் சிறப்பாகக் கொண்டு கம்புகளை அடித்து ஒலியெழுப்பும் விளையாட்டுக்கு அப்பெயர் வந்ததாகக் கொள்ளலாம். இந்த ஒலியைத் தவிர இரும்பு ஆயுதங்கள் மோதும் ஒலியும் இந்த ஆடலில் கேட்கும். ஒழுங்கு முறையாக அடித்தால்தான் தேறிய எதிரியை வீழ்த்த இயலும். ஆகை யினால் போர் முறைகளுக்கு உரிய சில விதி முறைகளுக்கு உட்பட்டு சிலம்படி அமைகிறது. அவ்வாறு அமைவதனால் கம்படிகள் ஒருவகை ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு எழும்
அது
கேட்பதற்குச் சுவையாக இருக்கும். இக்காரணம் பற்றியும் இந்த ஆடலில் ஒலிக்குச் சிறப்பிடம் கொடுக்கப் பட்டிருக்கலாம். போராடுவோரை உணர்ச்சியைத் தட்டி எழுப்பி அவர்கள் உயிர் மறந்து செயலில் ஈடுபடச் செய்வது முரசு ஒலியாகும். அது வீர வேகத்தை எழுப்பி நரம்புகளை முறுக்கேற வைத்து போராடும் துணிவைக் கொடுக்கிறது. இத்தகைய தோல் கருவியின் ஒலித் துணையுடன் தான் சிலம்பாட்டமும் நடைபெறு கிறது. பல நிலைகளில் ஒலி சிலம்பாட்டத்துடன் தொடர்பு பட்டுள்ளதைக் கவனித்து இப்பெயரின் பொருத்தத்தைச் சிந்திப்பது நலம்.
மனித வாழ்வில் போராடல் தவிர்க்க முடியாத ஓர் இயல்பாக அமைந்துள்ளது. ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று; இவ்வுலகத்து இயற்கை என்று கூறப் பட்டுள்ளதைப் பார்க்கலாம். மனிதன் மூதலில் கம்புகளைக் கொண்டு போராடியிருக்க வேண்டும். அவை அவனுக்கு மிக மிக எளிதாகக் கிடைக்கக் கூடிய ஆயுதங்கள். போரில் வெற்றி