66
முறை பார்ப்பதற்கு வியப்பாகவும் கையாள்வதற்குக் கடின மாகவும் இருக்கும். ஒரு காலை இருப்பில் பலமாக வைத்து (தரையில் ஊன்றி) மற்ற காலாலும் கைகளாலும் மிகத்துரித மாகச் செயல்பட்டு அடிக்க வேண்டும் இவை தவிர 12 நிலையங்கம், 12 அமத்தங்கமும் உள்ளன கர்னாடகச் சுவடு முறையும் சிலம்பாட்டத்தில் கையாளப் படுகிறது. கைதேர்ந்த வர்களே இதைச் செய்ய முடியும்.
இருவர் ஒருவரை ஒருவர் அடித்தலும், அடித்து அடித்துப் பிரிதலும் நல்ல திறமைக் காட்சிகளாகும். ஒருவர் இடம் பார்த்து அடிக்க வேண்டும். அடுத்தவர் அந்த இடத்தில் அடி விழாமல் தடுக்க வேண்டும். இதனை 'அடிச்சுப் பிரிவு' என்று கூறுவர். இன்னொரு வகைக்குப் ‘பூட்டுப் பிரிவு' என்று பெயர். ஒருவர் கைகொண்டு அடுத்தவரைப் பூட்டிப் பிடிக்கவும் அவர் திறமையாக அந்தப் பூட்டிலிருந்து பிரிந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
கத்தி, கம்பு, வாள் முதலிய ஆயுதங்களைக் கொண்டு விளையாடுவதை 'ஆயுதப் பெருக்கம்' என்று கூறுவர். எந்த ஆயுதத்தைக் கொண்டு எப்படித் தாக்கினாலும் அதிலிருந்து தப்பி எதிர் தாக்குதல் செய்வதே இந்த ஆடல். மிகத் திறமையும் கவனமும் இல்லையானால் கூர்மையான ஆயுதங்களுக்குப் பலியாக நேரிடும். வாய்ப்பாடு சொல்லிக் கொண்டு காலத்தைக் குறித்தவாறு கம்பு கொண்டு அடிப்பதற்குச் 'சிரமம்' என்று பெயர். மிகவும் நுட்பமான விளையாட்டாக இது உள்ளது. கணக்குத் தவறினால் காலும் கையும் தப்பாது. தலை போனாலும் போய்விடும். கணிதமாகவும் கலையாகவும் சிலம் பாட்டம் விளங்குகிறது.
தமிழ் நாட்டில் பல பகுதிகளில் சிலம்பக் கலை நடைபெறு கிறது. ஆயினும் குமரி மாவட்டத்தில் குறிப்பாக அதன் வடமேற்குப் பகுதியில் நடப்பது போன்று சிறப்பாக வேறு எங்கும் நடப்பதில்லை. மிகச் சிறந்த 'சிலம்படி ஆசான்கள் அப்பகுதியில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். நன்றாகக் கலை அறிந்தவர்கள் அதைப் பயன்படுத்தி 'முன்னடி' அடிப்பதில்லை. தன்னைக் காக்கும் கலையாகவே அதனைப் பலர் பயன் படுத்து கின்றனர். ஒரே அடியில் எதிரியை வீழ்த்தும் கலைஞரும் உள்ளனர். நன்றாகக் கலை தெரிந்தோர் மிகவும் பொறுமை யுடையவர்களாகவே காணப்படுகின்றனர். ஆனால் அவர்