73
முருகனுக்கு அரோகரா, வேல் வேல் முருகனுக்கு அரோகரா' என்ற ஒலிகளை எழுப்புவர். அங்கே ஒருவகை இறைத்தோற்ற நிலை உருவாகி விடும்.
காவடி எடுத்து ஆடுவோர் தங்கள் நாக்கிலும் உதடுகளிலும் சிறிய வேல்களைக் கொண்டு அலகு குத்திக்கொள்வதும் உண்டு. அவர்களால் வாய் திறந்து பேசவோ உணவு உட்கொள்ளவோ முடியாது. சில சமயம் முதுகில் செடல் குத்தி அதில் ஒரு தேரை இணைத்து இழுத்துக்கொண்டு வருவர். நோவைப் பற்றிச் சிறிதும் வருந்தாது இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். இச்செய்கைகளை நோக்கும்போது இது ஒரு கடினமான வழி பாட்டு முறையாகவே உள்ளது. தன்னை வருத்தி நோவைத் தானே வருவித்து இறையருளை வேண்டும் கடுமையான வழி பாட்டுச் சடங்காக இது நடைபெறுகிறன.
ஆடும்
இடும்பாசுரன் இரண்டு மலைகளைக் கட்டித்தூக்கி முருகனை வழிபடும் புராண நிகழ்ச்சியைப் பின்பற்றிக் காவடி எடுக்கும் வழக்கம் வந்ததாகக் கதை கூறுவர். குன்றுகளின் உச்சியில் பெறும்பாலும் முருகனுக்குக் கோயில்கள் அமைக்கப் பெற்றிருக்கும். இந்தக் கடவுளைக் 'குன்றுதோறும் முருகன்' என்று புகழ்ந்து கூறுவர். குன்றக் குரவையும் முருகனை வழிபடும் கலையாகவே உள்ளது. காவடியெடுத்து மலைமேலிருக்கும் கோவிலுக்குச் செல்வர். பழனி மலைக்கு ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கான காவடிகள் எடுத்துச் செல்லப்படும். நெல்லை மாவட்டத்திலிருக்கும் கழுகுமலை முருகன் கோயிலுக்குக் சாவடியெடுக்கும் வழக்கம் பன்னெடுங் காலமாக் இருந்துள்ளது. அவர்களுக்காகவே அண்ணாமலை
ரெட்டியார் காவடிச்சிந்து பாடல்களைப் பாடியுள்ளார். பாண்டிச்சேரியை அடுத்த மயிலம் முருகன் கோயில், குமரி யிலுள்ள குமார கோயில் போன்ற பால கோயில்களுக்குக் காவடி எடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. சந்தனக்காவடி, சர்ப்பக் காவடி என்று பலவகை உண்டு. மேலும் சேவல் காவடி, மச்சக் காவடி, வேல்காவடி, என்று பல உண்டு. ஒவ்வொன்றும் வேறு பாடுடைய வழக்க முறைகளையுடையன. வேல்காவடி எடுப் போர் உடம்பில் ஆயிரத்து எட்டு, நூற்றி எட்டு என்ற கணக்கு களில் வேல்களைக் குத்திக் கொள்வர். காவடியெடுப்போர் அணியணியாக மலையில் ஊர்ந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.