பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழக வரலாறு -கரிகாற் பெருவளத்தான்

திறனாய்வு நிலையில்,ஒரு பொருள் பற்றி,ஒருவர்; ஒரு முடிவினை நிலைநாட்ட முயலும்போது, அதற்குத் துணை நிற்கும் சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்து வைப்பதைக் காட்டிலும்,அம்முடிவுக்கு மாறாக எடுத்து வைக்கப்படும் சான்றுகளைத் தக்க காரணம் காட்டி மறுக்க வேண்டியது தலையாய கடமையாகும். தருக்க முறையில், இதைப், 'பிறன்கோள் மறுத்துத் தன்கோள் நிறுவுதல்' என்ப.

தொல்காப்பியர், கி.பி. முதல் நூற்றாண்டிற்கு. முற்பட்டவராகார். என்பதை நிலைநாட்ட முயலும் திருவாளர் பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், தொல்காப்பியர்,கி.மு. 350க்கு 'முற்பட்டராவர் என்பதை நிலைநாட்ட, திரு. எம். சீனிவாச அய்யங்காரலர்கள் எடுத்து வைக்கும், மேலே கூறிய வலுவான இரு சான்று; களை மறுக்கவில்லை. திரு.எம்.எஸ். அவர்கள் அம்முடிவு கொண்டுள்ளார். என்பதை அறிந்திருந்தும் அதை மறுக்காமை மட்டுமன்று; அவ்வாறு ஒரு கருத்து நிலவுகிறது என்று தானும் குறிப்பிடவில்லை.அதை மறுப்பதற்கான காரணத்தைத் திரு.பி.டி.எஸ். அவர்களால் காண இயலவில்லை என்பதே அதற்குப் பொருளாம்.

தொல்காப்பியரைக், கி.பி. முதல் நூற்றாண்டிலேயே நிறுத்த, திரு.பி.டி.எஸ். அவர்கள் தேடிப் பிடித்த, தமிழ் "ஓரை”யும் அவர்க்குத் துணை புரியவில்லை; தலைவன் தலைவியர்தம் காதல் வாழ்க்கைக்குத் துணை போகும். பார்ப்பனப் பாங்கனும், திரு.பி.டி.எஸ். அவர்களைக் கைவிட்டு விட்டான். தொல்காப்பியர், கி.மு. 350க்கு முற்பட்டவர் என்ற எம்.எஸ். அவர்களின் வாதத்தின் முன் நிற்கவும் மாட்டாது தலைமறைவாகி விட்டார் திரு.பி.டி.எஸ்.