பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. பிட்டங் கொற்றன், குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனால், வென்று காயப்படுத்தப்பட்டானா?

பிட்டங் கொற்றனைப் பாடிய புலவர்களில், நானூற்றில் பாடிய புலவர்கள், மருதன் இளநாகனார்1, ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்2, ஆகிய இருவரும், அவன், வானவன்-படைத்தலைவன் என்பதையும், அவன் பெயர் பிட்டன் என்பதையும் உணர்த்தியுள்ளனர்.

பின்னவர் மட்டும், அவன் குதிரை மலைக்கு உரியவன் என்பதையும் உணர்த்தியுள்ளார்.அத்துடன் 'அவன் வாட்போர் என்றும் பொய்த்துப் போவது இல்லை; பரிசில் விரும்பி வருவார்க்கு, அவர் விரும்பும் அணிகள் அளிப்பன் என அவன் கொற்றம் கொடைகளையும் கூறியுள்ளார்.3

முன்னவர், அவன் வானவன் மறவன்-என்பதையும், அவன் பெயர் பிட்டன் என்பதையும் உணர்த்தியதோடு அவன் கையில் எப்போதும் வலைக்கப்பட்ட விற்படையும் பகை மன்னர்களை அழிக்கவல்ல திருந்திய வேற்படையும் இருக்கும்' என, அவன் கொற்றத்தையும் பாடியுள்ளார்4.

புறநானூற்றில் பிட்டனைப் பாடிய புலவர்கள், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்5, உறையூர் மருத்துவன் தாமோதரனார்,6 வடம வண்ணக்கண் தாமோதரனார்,7 கருவூர்க் கந்தப்பிள்ளை,8 ஆகிய நால்வர் ஆவர்.