பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்

111

சீனி.வேங்கடசாமி அவர்கள் கூறுமாறு,18 மாந்தரஞ்சேரல் இரும்பொறை அன்று; இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவன்.இதை மாறோக்கத்து நப்பசலையார் பாடிய புறப்பாட்டொன்று19 உறுதி செய்கிறது. அப்பாட்டு இது.

"இமயம் சூட்டிய ஏம் விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடுகெழு நோன் தாள்"

இப்பாட்டில், "தொலைய" என்ற சொல் வந்திருப்பினும்,அது இறந்து போக என்னும் பொருள் தருவதாகாது. "தோற்க" என்றே பொருள் தரும்: சேரமான் மாந்தரம் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் பொருதவழிக் சேரனுக்குத் துணையாகப் போரிட்ட தேர்வண் மலையனைப் பாராட்டி வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடிய பாட்டில்,20

வென்றோனும் நின்கூறும்மே.
வெலீ இயோன் இவன். என
தோற்றோள் தானும் நிற்கூறும்மே
தொலை இயோன் இவன்...?"

"இமயம் சூட்டிய ஏம் விற்பொறி

மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டும் நின் பீடுகெழு நோன் தாள்"

என வரும் தொடரில் இடம் பெற்றிருக்கும் "தொலை இயோன்" என்ற சொல், தோல்வியுறச் செய்தவன் என்ற பொருள் தருவதல்லது, இறக்கச் செய்தவன் என்ற பொருள் தராமை உணர்க.

மேலும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,இறந்தது,சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியோடு, திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் என்பதே உண்மை: பரணரும்,21 கழாத்தலையாரும்22 பாடிய புறநானூற்றுப் பாடல்களைக் காண்க.