பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழக வரலாறு-சுரிகாற் பெருவளத்தான்

22 கேள்விகவ் (சுருதிகள்) கொண்ட இசைப்பாங்கு என்று அறிஞர்கள் விளக்கம் கண்டுள்ளனர்.5 இந்த வகையில் மாங்குடி மருதன் இசையில் சிறந்து விளங்கினார் என்பது பெறப்படுகிறது6 என்றும்; "இந்த மாங்குடி மருதனார் நாம் முன்பு குறிப்பிட்ட தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சிறப்பித்துப் பாடு கையில்" பெரியகற்று இசை விளக்கி7 என்றும் குறிப்பிட் டுள்ளார். பாண்டிய அரசன் இந்தப் புலவரை 'இசையில் வல்லவர்' என்று குறிப்பிட்டிருப்பதையும், இந்தப் புலவர்' பாண்டிய அரசனை 'இசை விளங்கும்படி செய்தான்’ என்று குறிப்பிட்டிருப்பதையும் எண்ணிப் பார்க்கும்போது, இசைத் தமிழ் வளர்க்கப்பட்டதைத் தெளிவாக உணர முடிகிறது. இந்த வகையில் பாண்டியனது சங்கத்தில் இசைத் தமிழும் வளர்க்கப்பட்டது என்று நாம் கொள்ளலாம்" எனவும் தம் முடிவுகளை அறிவித்துள்ளார்.8


'கேள்வி' என்ற சொல், தன்னளவில் 'இசை' எனும் பொருள் தருமா? இதற்கு விளக்கம் காண, 'கேள்வி' என்ற சொல் இடம் பெற்றுள்ள இலக்கியத் தொடர்கள் சிலவற்றைக் காண்போம்.

1."ஆறு எழுத்து அடுக்கிய அருமறைக் கேள்வி"9

2. வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் கேள்வி போகிய நீள்விசித் தொடையன்10

3.அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி

நரம்பின்

பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்வி11

4."புரி அடங்கு நரம்பின் தொடையமை கேள்வி இடவயின் தழீஇ"12

5."கேள்வி அந்தணர்"13

6."சொல், பெயர். நாட்டம், கேள்வி, நெஞ்சம்

(என்று

ஐந்துடன் போற்றி"14