பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

119

வரலாறு-சங்க காலம்-அரசியல்" நூலில், காலக்கணிப்பு, கட்டுரையாளர் கூறியிருப்பது எவ்வாறு பொருந்தும்.

மேலும், மாங்குடி மருதன் தலைமையில் இசை ஆராயும் சங்கம் அமைக்கப்பட்டது எனக் கூறியவர்,மாங்குடி மருதனின் பாட்டுடைத் தலைவனாகிய, நெடுஞ் செழியனும் இசைக்கலையைப் பரப்பினான் எனக் கூறி, அதற்குச் சான்றாக, “பெரிய கல்விகளைச் கற்று புகழை விளக்கி"40 எனப் பொருள் தருவதாய "பெரிய கற்று இசை விளக்கி" என்ற தொடரில் வரும் இசை' எனும் சொல் அக்கு, புகழ்' எனும் பொருளை விடுத்து, இசை எனும் பொருள் கோடலும் எவ்வாறு பொருந்தும்?

சங்கம் தமிழ் வளர்த்தது என்றால்,அது இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழையும் வளர்த்தது என்பதுதானே பெறப்படும். அங்ங்னமாகவும், இசைத் தமிழையும் வளர்த்தது என எடுத்தோதத் தேவை இல்லை; எடுத்து ஓதுவதாயின், நாடகத் தமிழை வளர்த்ததற்கும் சான்று காட்டி இருக்க வேண்டும், காலக் கணிப்பு’க் கட்டுரையாளர் அது காட்டியுள்ளாரா என்றால், இல்லை.