பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9.பெருநற்கிள்ளி - கால நிரல் அமைப்பு முறை சரியானது தானா?

தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினரால் தொகுக்கப் பெற்று, தமிழ்நாடு அரசு வெளியீடாக, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்காக, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1983-ல் வெளியிட்ட 'தமிழ்நாட்டு வரலாறு-சங்க காலம் அரசியல்' என்ற நூலில், 'சோழர்' வரலாற்றை திருவாளர். மயிஸ்ல, சீனி, வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார். (பக்கம்.249-342).

அவர் தம்முடைய கட்டுரையில்,'பெருநற்கிள்ளி' மரபினர்' என்ற தலைப்பில், "பெருநற்கிள்ளி என்னும் பெயர் கொண்ட அரசர்களின் பெயர்கள் நான்கு வெவ்வேறு அடைமொழிகளுடன் காணப்படுகின்றன.

1. போரவைக் கோப்பெருநற்கிள்ளி (பெருநற் கிள்ளி-1)

2.முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (பெருநற் கிள்ளி-2)

3.வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி (பெருநற் கிள்ளி-3)

4.இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (பெருநற் கிள்ளி -4) என்பன அந்தப் பெயர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பெருநற்கிள்ளி எனும் பெயருடையார் நால்வர்.அவர்களிடையே வேறுபாடு காண, அவர்கள் முறையே