பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்.

"கூரிய நகத்தினையும், வளைந்த வரிபடர்ந்த உடலை யும் உடைய புலிக்குட்டி கூட்டில் அட்ையுண்டு வளர்ந்தாற் போல் பகைவர்களின் சிறையிடத்தே அடைக்கப்பட்டிருந்து, தான் பெருமை பெற வேண்டும் என்ற உணர்வு வயிரம் ஏறிமுற்ற, சிறையினின்றும் வெளியேறுவதற்காம் வழி வகைகளை நுண்ணிதாக ஆராய்ந்து, யானை பிடிப்பார் அகழ்ந்து வைத்த குழியில் வீழ்ந்துவிட்ட, நீண்ட கையை யுடைய ஆண்யானை, தான் அகப்பட்டிருக்கும் குழியின் ஏறுதற்கு அரிய கரையைத் தன். தந்தங்களால் குத்தி மண்ணைச் சரித்துக் குழியைத் துார்த்துவிட்டுக் கரை ஏறித் தான் விரும்பும் தன் பிடியானையோடு சேர்ந்து கொண்டாற் போல், பகையரசர்களின் காவல் மிக்க சிறையினின்றும் வெளியேறி,வாளை உறைகழித்து ஏந்தி, தனக்கு உரிமை பொருந்த வழிவழி வந்த அரச உரிமை, முறைப்படி பெற்றான்."

"தன் அரசைத் தான் பெற்றதோடு மனநிறைவு கொள்ளாது, பகையரசர்களின் அரண்களைக் கைப்பற்றும் கருத்தோடு, அதற்கு அடையாளமாகிய உழிஞை மாலை அணிந்துகொண்டு, யானைப் படையோடும், குதிரைப் படையோடும் சென்று, பகையரசர்களின் துாசிப்படை வீரர்களை அழித்து, அரிய காவல் அமைந்த பகைவர்களின் ஊர்கள் பலவற்றை அழித்தும், அமைதி கொள்ளாது, தான் பெற விரும்பிய வெற்றிகள் எல்லாவற்றையும் பெற்று விட்டான் ஆகவே, செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலங்களுள் ஒன்றாகிய ஒளி நாட்டவர் பணிந்து ஆற்றல் அழிந்து போக, மேற்கூறிய நாடுகளுள் மற்றொரு நாடாகிய அருவா நாட்டரசரும் தன்.ஏவல் கேட்கவும், தென்னவனாம் பாண்டியன் ஆற்றல் அழியவும், பொதுவராம் இடைக்குல அரசர் குலம் முழுதும் கெடவும்: இருங்கோ வேள் என்பான் குலம் முழுதும் அழியவும், வென்றான்."