பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவிந்தனார்

13

வருடன், இருபெரு வேந்தர்களும், நிலை கெட்டுப் போகு, மாறு அவர்கள் படிைஆற்றலை அழித்தநாள்ல், அழுந்துார்க் கண் எழுந்தது. ஆர்ப்பு.

"காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம், பொருகளத்து ஒழியப்
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய்வலி அறுத்த ஞான்றைத்
தொய்யா அழுந்துார் ஆர்ப்பு"26

"கழா அர் என்னும் ஊரில், பெரிய சுற்றத்தோடு இருந்து கரிகால் வளவன் கண்டு கொண்டிருக்க, புனல் ஆடல் மேற்கொண்டு, சிறந்த வேலைப்பாடு அமைந்த வீரக் கழல் காலில் புரள, கரிய கச்சணிந்து அடிவயிற்றில் மணியும் கட்டிக்கொண்டு, கஞ்ச தாளம் ஒலிக்க புனலாடலை விரும்பி ஆடும், ஆட்டனத்தியின் அழகை விரும்பி, காவிரி யாறு ஈர்த்துக்கொண்டு ஒளித்துக்கொண்டது.

"கழா அர் முன்றுறைக்
கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத்
தண்பதம் கொண்டு தவிர்ந்த இன்னிசை
ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக்
கருங் கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
இரும்பொலப் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப்
புனல் நயந்து ஆடும் அத்தி அணிநயந்து
காவிரி கொண்டொளித்தாங்கு"27

"வாள், வலந்தர மறுப்பட்டன” எனத் தொடங்கும் மற்றொரு புறநானூற்றுப் பாடலும்', பரணர் பாடியதே. அப்பாடல், பரணர், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி யைப் பாடியதாக அப்பாடலின் கொளு கூறுகிறது. பாட்