பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

கரிகாலன். வெண்ணிப் பறந்தலைப் போரில் பெற்ற வெற்றி குறித்து, அழுந்துாரில் விழாக் கொண்டாடப் பெற் றது என்று கூறும் பரணர் பாட்டால்3, அழுந்துார் வேளிர் மகளே, உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மனைவி யாவாள்; கரிகாலனின் தாயாவாள் என்ற உண்மை மேலும் உறுதிசெய்யப் பெறும்,

ஊன் பொதி பசுங்குடையார்என்ற புலவர். பாராட்டி யோராகச் சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி என்பவனும்4, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்பவனும்5, ஆக இருவர் உளர்.

இரண்டாவதாகக் குறிக்கப் பெற்ற 'செருப்பாழி எறிந்த' என்ற தொடர்க்குப், போர்க்களமாகிய பாழி என்ற் ஊரை அழித்த என்றே பொருள் கொள்ள வேண்டும். பாழி, சேர நாட்டைச் சேர்ந்த ஊராக விளங்குவதாலும், சேர்மான் பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென்னியும், சேர நாட்டுப் பாமுளூர் என்ற ஊரை வென்றதாகத் தெரிவதாலும், இருவர்க்கும் இளஞ்சேட் சென்னி என்ற பெயர் ஒற்றுமை உண்மையாலும், இருவரையும் பாராட்டிய புலவர் ஒருவராகவே இருப்பதாலும், சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னியும், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியும் வேறு வேறு அல்லர்: ஒருவரே எனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, வம்ப வடுகரை ஒட்டிப் பாழியை அழித்த இளம் பெருஞ் சென்னி என்பவன் வரலாறு, அகநானுாற்றில் குறிப்பிடப்பட்டுளது6. செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியும், வடுகரை வென்றான் எனப் புறநானூற்றில் குறிப்பிடப் பட்டுள்ளான்7. பாழியை அழித்தலும், வடுகரை வேறலும் இருவர்க்கும் ஏற்றிக் கூறப்பட்டுள்ளமையாலும், இளஞ்சேட் சென்னி, இளம் பெருஞ்சென்னி என்ற பெயர்கள் ஒற்றுமை கொண்டிருப்பதாலும், அகத்தில்,8