பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவிந்தனார்

49

அது மட்டுமன்று, பக்கம் 282ல், "சென்னி' எனும் சோழர் குடியைச் சேர்ந்த இரு அரசர்கள், கரிகால் பெரு வளத்தர்னுக்கு முன்னர் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி (இளஞ்சேட் சென்னி-1), செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி எனும் உருவப்பஃறேர் (இளஞ்சேட் சென்னி-2)' என கூறியதன் மூலம், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆகிய இரு வேறு பட்டவர்களை, ஒருவராக; காட்டிவிட்டு, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி எனும் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னிதான் இளஞ்சேட் சென்னி-2 என வரிசைப் படுத்தும் ஆசிரியர்,

அடுத்த பக்கத்தில், பக்கம் 283ல், இளஞ்சேட் சென்னி. II ஆக, செருப்பாழி எறிந்தவனைப் பிரித்துக் காட்டியுள்ளார். அதே போல் பக்கம் 282ல் இளஞ்சேட் சென்னி-2, என்று காட்டப்பட்ட உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, 285ல், இளஞ்சேட் சென்னி-3 என்று தனிமைப்படுத்திக் காட்டப்பட்டப்பட்டுள்ளான். ஏன் இந்த முரண்பாடு?

உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, செருப்பாழி எறிந்த் இளஞ்சேட் சென்னி, நெய்தலங்கானத்துப் பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென்னி, எனப் புலவர்களால் தெளிவாக அறிமுகப் படுத்த, சிறப்பு அட்ைகள் கொடுக்கப் பட்டுள்ளன. அங்ங்னமாகவும், நெய்தலங் கானத்துப் பாமுளுர் எறிந்தான் முதல்வன் போலவும், செருப்பாழி எறிந்தான் இரண்டாமவன் போலவும், உருவப்பஃறேர் உடையான் மூன்றாமவன் போலவும், பொருள் கொள்வ் தற்கு ஏற்ப, இளஞ்சேட் சென்னி-1 என்றும், இளஞ் சேட் சென்னி-2 என்றும், இளஞ்சேட் சென்னி-3 என்றும் முறையே வரிசைப் படுத்தல் தேவைதானா என்பதை எண்ணிப் பார்த்தல் நலம்.