பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. உதியஞ்சேரல் என்பானும் சேரமான பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதன் என்பவனும் வெவ்வேறு அரசர்கள் என்பது பொருந்துமா?

தமிழ் நாட்டு வரலாற்றுக் குழுவினரால்,தொகுக்கப் பெற்று, தமிழ்நாட்டு அரசு வெளியீடாக, தமிழ் வளர்ச்சி இயக்ககம், 1983ல் வெளியிட்டுள்ள "தமிழ்நாட்டு வரலாறு. சங்க காலம்-அரசியல்" என்ற நூலில் "சேரர்" என்ற தலைப்பில், ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை. சீனி. வேங்கட சாமி அவர்கள், சேர மரபினரின் வரலாற்றை எழுதியுள்ளார்.

அக்கட்டுரையின் 139வது பக்கத்தில் "உதியஞ்சேரல்' - என்ற தலைப்பின்கீழ் ஒப்புநோக்கம்:

சேரமான் பெருஞ்சேர்ற்று உதியன் சேரலாதன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பாரதப் போரில் இருதரத்துப் படைகளுக்கும் சோறு வழங்கினான். அவன் (சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்) வேறு, இவன் (உதியஞ் சேரல்) வேறு என்று கூறியுள்ளார்.

அதே கட்டுரையின் 227வது பக்கத்தில் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற தலைப்பின் கீழ்,

த-4