பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

57

இத்தகைய சுற்றத்துடன் இமய மலையும் பொதிய மலையும் போல அசைவின்றி வாழ வேண்டும் என்று இவன் வாழ்த்தப் படுகிறான்.ஆட்சிப் பரப்பு, பொதியத்திலும், புகழ்ப் பரப்பு இமயத்திலும் விளங்கியமை நோக்கி இவன், இவ்வாறு வாழ்த்தப் படுகிறான்.

எனப் பலபடப் போற்றியிருக்கும் கட்டுரையாசிரியர், அதற்கும் மேற்கோளாக, முரஞ்சியூர் முடிநாகராயர் அவர்களுடைய அதே புறப் பாடலின்,

“நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண்டலைப் புணிரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிடுபதம் வரையாது
                                 கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகலிருளினும்
நாஅல் வேத நெறிதிரியினும்
திரியார் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும் முத்தீ, விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே"

என வரும் வரிகளையே காட்டியுள்ளார்.6

அடுத்து, பக்கம் 227ல் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனின் பண்புநலன் கூற வந்த கட்டுரை யாசிரியர்,