பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

59

இவன் (சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்) சோறு வழங்கினான்; பெருஞ்சோற்று விழா நடத்திச் சிறப்பாக வழங்கினான்; நண்பர், பகைவர், என்று வரையறுத்துக் கொள்ளாது (வரையாது) எல்லோருக்கும் வழங்கினான் என்று கூறியுள்ளார்.

பக்கம் 227ல், உதியஞ்சேரல், சேர்மான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் இருவரும் வெவ்வேறு அரசர்கள் என்ற தலைப்பின் கீழ், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் பற்றிக் கூறும் இடத்திலும், அவன், பாரதப் போர் நடந்த காலத்தவன். வீரர்களுக்குப் பெருஞ் சோறு அளித்தான் என்று கூறிப் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரத காலத்தவன் என்பதைக் கட்டுரையாளர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் உறுதி செய்துள்ளார்.

ஆனால், அவரே, பக்கம் 226ல், பாண்டியரில், பஞ்சவர், கெளரியர் என்போர் கிளைக் குடியினர் ஆவர். இந்தக் கிளைக் குடியினர்க்கிடையே போர் நடந்த போது, இவன் (சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்) இவ்வாறு நடந்து கொண்டான் என்று அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கருதுகிறார். (இது எழுதுபவரும் திருவாளர். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களே தாம் என்பதை நினைவில் கொள்வது நல்லது.) "பொலம் பூண் ஐவர்" எனச் சங்கப் பாடல் குறிப்பொன்று கூறுகிறது. அது பாண்டியரைக் குறிப்பிடுகிறது. எனவே, பாண்டியரும். ஐவர் எனத் தெரிகின்றது. நூற்றுவர் என்பார், ஈரைம் பதின்மரைக் கொள்ளலாம். எனவே, இது கெளரியர் என்னும் துரியோதனன் முதலானோரைக் குறிக்காமல் பாண்டியரில் ஒரு குடியினராகிய கவுரியரை குறிப்பிட்டிருக்கலாம். பாண்டிய நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்த போது இவன் இரு படைக்கும் உணவு வழங்கி