பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்.

89

பலதேவனுக்குக் கோயிலே இல்லை. ஆனால், மாயோன் கோயிலை அடுத்துக் கட்டப் பெற்ற பலதேவன் கோயில், காவிரிப்பூம்பட்டினத்திலும்,மதுரையிலும்,சங்க காலத்தி லேயே இருந்தது. பல தேவனுக்கு உரிய கொடி பனைக்கொடி. பனைமரம் கங்கை வெளியில் வளர்வதில்லை. மணல் பரந்த தமிழ்நாட்டு ஆற்றங்கரைகளிலேயே வளரும், கூறிய கிக் காரணங்களைக் கொண்டு நோக்கிய வழி, ஆர் மீனியாவில், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இடங் கொண்டிருந்த அவ்வழிபாட்டுமுறை, தமிழ் நாட்டிலிருந்து தமிழ் வணிகர்களாலேயே கொண்டு செல்லப்பட்டது என். பது உறுதியாகிறது.16

"இந்தியா, ஐரோப்பாவோடு மேற்கொண்ட வாணிகத்தில், கி.மு,500இல், கிரேக்கர்கள் இடைத்தரகர் ஆயினர். அதன் விளைவாக, அரிசி என்ற தமிழ்ச்சொல், "ஒரைஸா" என்ற வடிவிலும், கருவாப்பட்டையைக் குறிக்கும் கருவா என்ற தமிழ்ச் சொல், "கார்பியன்" என்ற வடிவிலும், இஞ்சி வேர் எனும் சொல், ஜிஞ்சிபெரோஸ் என்ற வடிவிலும், வைடூரியம் எனும் சொல், "பெரிலோஸ்" என்ற வடிவிலும் கிரேக்க மொழி நூல்களில் இடம்பெற்று விட்டன.17


கி.மு பத்தாம் நூற்றாண்டில்,மன்னன் காலமனுக்கு ஷீபா:அரசியார் அளித்தனவற்றுள், நறுமணப் பொருள்கள், விலை மதிக்கவொண்ணா மாணிக்கங்களும் இடம் பெற்றிருந்தன,சாலமனுக்குரிய கலங்கள், மூன்று ஆண்டிற்கு ஒரு முறை, பொன், வெள்ளி, தந்தம், அகில், சந்தனமரங்கள், வாலில்லாக்குரங்கு, தோகையழகுவாய்ந்த மயில்கள் முதலாம் பொருட்களை வாரிக்கொண்டு வந்தன. தமிழ் வணிகர், தமிழ்நாட்டுப் பொருட்களையேயல்லாமல், அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் ஆண்டு கொண்டு சென்றனர். "அகில்” என்ற தமிழ்ச் சொல், *“அகல்” என்ற