பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழக வரலாறு கரிகாற் பெருவளத்தான்

இது, வேதகாலத்தின் முடிவுக்கு நம்மைக் கொண்டு சேர்க்கிறது30

ஆக,கி.மு.3000 தொடங்கி, கி.மு. 1500 வரையான காலம், வேதகாலம் என்பது, திருவாளர், பி.டி.எஸ். அவர்களின் கருத்தாம் என்பது தெளிவாயிற்று.

"கி.மு. 3000 முதல் கி.மு. 1500 வரையான காலமாகக் கருதப்பட்ட வேதகாலத்தில், தென்கோடித் தமிழகத் தின் விளைபடு பொருளாம் முத்து, வட இந்திய ரிஷிகளால் ஒப்பனைப் பொருளாகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது."31 எனக் கூறிவிட்டு, அதை உறுதி செய்ய, இருக்கு வேதத்திலிருந்து எண்ணற்ற சுலோகங்களை, அகச்சான்றுகளாக எடுத்துக் காட்டியுள்ளார், திருவாளர் அய்யங்கார்.

இது கூறிய அவர், "அம்முத்திற்குச் சமஸ்கிருதம் இட்டு வழங்கும் பெயர் "முக்தா" என்பது. இது வேத இலக்கியங்களில், ஓரிடத்தில் ‘விமுக்தா' என இடம் பெற்றுளது"32 என்றும் கூறிவிட்டு, அச்சொல்லின் மூலம் குறித்து, மேனாட்டுச் சமஸ்கிருத முதுபெரும் திறனாய் வாளர்களாகிய திருவாளர்கள், மேக்டொனேல் (Macdonel) கெய்த் (Keitb), மோனியர் வில்லியம்ஸ் (Monier Williom's) ஆகியோர் அளிக்கும் விளக்கங்களை வலுவாக மறுத்து விட்டு, "முக்தா" என்ற அவ்வடசொல்; தமிழ்நாட்டு முத்து' என்ற பொருளோடு, கடனாகப் பெற்று, முக்தா எனச் தமிழ்ச்சொல் சமஸ்கிருதமாக்கப்பட்ட முத்து என்ற அல்லது வேறு அன்று”33 என்றும் கூறி முடித்துள்ளார்.

ஆக, தமிழ்நாட்டின் தென்கோடி விலைபடுபொருளாம் முத்து மட்டுமல்லாமல் அதன் பெயரும், வேதகாலத்தில், அதாவது கி.மு. 3000க்கும், கி.மு. 1500க்கும் இடைப் பட்ட காலத்தில், வடநாடு சென்று, அம்மொழி வழக்காற்