பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

52. தழும்பன்

கடற்கரைப் பட்டினமாகிய மருங்கூர்ப் பட்டினத்தை அடுத்து அமைந்த ஊர் ஊனுார். மதில் சூழ்ந்த அரண் உடைய அவ் ஊணுாரில்; போர்க் களத்தில் யானையால் தாக்குண்டு, அதனால் தழும்பு பெற்ற வீரன் வாழ்ந்திருந்தான். அவனை, தழும்பன், வழுதுணைத் தழும்பன் என்று பெயரிட்டு பாராட்டினர்.109 தழும்பன், வாட்போர் வல்ல வீரன் மட்டுமல்ல, வரையாது வழங்கும் வள்ளலாகவும் திகழ்ந்தான். வாய்மையே வழங்கும் வழக்குடையானாக விளங்கினான்.110 துாங்கலோரியார் எனும் புலவரால் பாராட்டப் பெற்றவன். பரணரும், நக்கீரரும் அவன் புகழ் பாடியுள்ளனர்.

53. தாமான் தோன்றிக்கோன்

கருவூர்க்கு அண்மையில் உள்ள தோன்றி மலைக்குரிய வள்ளல். புலவர் ஐயூர் முடவனார் என்பார் உறையூர் ஆண்ட சோழன் கிள்ளி வளவனை நாடி பரிசில் பெறச் செல்லும் வழியில், அவர் சென்ற தேரில் பூட்டிய எருது சேற்றில் சிக்கித் தளர்ந்து போனது. அண்மையில் வாழும் தோன்றிக் கோவின் சிறப்பறிந்து அவனைக் கண்டார்,அவன் அளித்த பரிசில் பெற்று பாடிப் புகழ்ந்தார்111

54. திதியன்

திதியன் என்ற பெயருடையார் மூவரை சங்க இலக்கியங்களில் காண்கிறோம். இவர்களுள் பரணர் போற்றும் அழுந்தைத் திதியன் ஒருவன். அன்னி மிஞிலி